காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் நேற்று (25.11.2011) முதல் மழை பெய்து வருகிறது. சாரல், தூறல் என நேற்று பகல் நேரம் முழுக்க பெய்த மழை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழியையடுத்து, இரவில் கனமழையாக உருவெடுத்தது.
நள்ளிரவு முழுக்க கொட்டிய கனமழை, காலை 09.30 மணியளவில் ஓய்ந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நகரில் சூரிய ஒளி படர்ந்து, தற்போது நல்ல வெயில் அடிக்கிறது. இந்நிலையில், இன்று காலை 05.30 மணிக்கு பதிவான செயற்கைக்கோள் படத்தின்படி, காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றே தெரிகிறது. மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெய்த கனமழையால் நகரின் அனைத்து தாழ்வுப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. சிமெண்ட் சாலைகள் ஏற்கனவே போடப்பட்ட வீதிகளிலும், புதிதாக போடப்பட்ட வீதிகளிலும், சந்துகளில் நீர் தேங்கி, பொதுமக்கள் தம் வீடுகளுக்குள் செல்வதற்கு பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளது. தெரு முனைகளில் நிறுவப்பட்டிருக்கும் நகராட்சி குடிநீர் வினியோகத் திறப்புக் குழாய் தொட்டிகள் வழமை போல தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது.
நீர்த்தேக்கக் காட்சிகள் பின்வருமாறு:-
|