கடல் சீற்றம் காரமமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடையக்குடியில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஃபைபர் படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதுடன் 12 படகுகள் சேதமும் அடைந்துள்ளன.
கடல் சீற்றம் காரணமாக காயல்பட்டினம் கடையக்குடியில், 25.11.2011 வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவு கடல் அலைகள் 10 அடி உயரத்தில் கடற்கரையை ஆட்கொண்டன. இதன் காரணமாக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 77 ஃபைபர் படகுகளில் 4 படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. 8 படகுகள் ஒன்றுக்கொன்று மோதி சேதமடைந்தன.
இழுத்து செல்லப்பட்ட அல்கந்தர், தாமஸ், மரிய ரோச் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் படகுகளை மீனவர்கள் கடற்கரைக்கு மீட்டுக்கொண்டு வந்தனர். அப்படகுகளில் பாகங்கள் பெயர்ந்தும், ஓட்டை, கீறல் விழுந்தும் உள்ளன.
மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் ஜான்சன், கிளிட்டஸ், மோகன், பிரான்சிஸ், ரிக்கோரி, ஏ.தாஸன், ஏ.பி.தாஸன் மற்றும் அருள் கிளாடின் ஆகியோரது படகுகள் பலத்த காற்று காரணமாக ஒன்றுக்கொன்று மோதியதில் லேசான சேதங்கள் அடைந்துள்ளன.
சேதமான படகுகளை ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் அ.செல்வலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.
கடையக்குடி பகுதி மீனவர் சமுதாய தலைவர் நிக்கோலஸ் படகுகள் சேதம் குறித்து மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
சேதமடைந்த படகுகளை அப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் பார்வையிட்ட காட்சி:-
|