காயல்பட்டினத்தில் நேற்று முழுக்க மழை பெய்தவண்ணம் இருந்தது. நேற்று முன்தினம் (நவ.25) பெய்த மழை நேற்று (நவ.26) காலை 09.30 மணியுடன் நின்றது. பின்னர் சில மணி நேரம் வெயில் அடித்தது.
நேற்று மதியம் 01.30 மணிவாக்கில் மீண்டும் சாரலுடன் துவங்கிய மழை, அவ்வப்போது சாரலாகவும், பெரும்பாலும் மிதமழையாகவும் பெய்து, நள்ளிரவு 12.30 மணியளவில் ஓய்ந்தது. இந்த தொடர் மழையால் நகரின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (26.11.2011) பெய்த மழையளவு பட்டியல் பின்வருமாறு:-
திருச்செந்தூர் - 61 மிமீ
காயல்பட்டினம் - 37 மிமீ
குலசேகரன்பட்டினம் - தகவல் இல்லை
விளாத்திக்குளம் - 40 மிமீ
காடல்குடி - 18 மிமீ
வைப்பார் - 42 மிமீ
சூரங்குடி - 20 மிமீ
கயத்தார் - 25 மிமீ
கடம்பூர் - 41 மிமீ
கழுகுமலை - 10 மிமீ
கோவில்பட்டி - 27 மிமீ
ஓட்டப்பிடாரம் - 26 மிமீ
மணியாச்சி - 5 மிமீ
வேடநத்தம் - 35 மிமீ
கீழஅரசரடி - 12 மிமீ
எட்டையபுரம் - 33 மிமீ
ஸ்ரீவைகுண்டம் - 54.5 மிமீ
சாத்தான்குளம் - தகவல் இல்லை
தூத்துக்குடி - 50.5 மிமீ
மொத்த மழையளவு - 648.4 மிமீ
சராசரி மழையளவு - 34.1 மிமீ
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திருச்செந்தூரிலும், அதனையடுத்து கழுகுமலையிலும் அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காயல்பட்டினத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணி முதல் மழை பொழிவு இல்லை. இன்று காலையில் தற்போது 10.00 மணி வரையிலும் சூரிய ஒளியில்லை.
இன்று நள்ளிரவு 03.30 மணிக்கு பதிவான செயற்கைக்கோள் படத்தின்படி வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழி கரை கடக்கவில்லை. இதனால் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறியப்படுகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழி காரணமாக மீனவர்கள் யாரும் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. காயல்பட்டினம் கடையக்குடியில் மீன் பிடிக்கச் செல்லாததால் கடற்கரையோரத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்சி:-
தகவல் மூலம்:
www.kayalsky.com |