சிறுபான்மை மக்களுக்காக அரசு (TAMCO,NFDC) சார்பில் தொழில்நுட்ப இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
தொழில்நுட்ப பயிற்சியின் விபரம்...
FCP (FINAL CUT PRO) -DNLE
(டிஜிட்டல் நான் லீனியர் படத்தொகுப்பு)
CINEMATOGRAPHY ON VIDEO கேமரா
(டிஜிட்டல் வீடியோகிராபி)
MULTI MEDIA
(மல்டிமீடியா)
DIGITAL STILL PHOTOGRAPHY
(டிஜிட்டல் ஸ்டில் போட்டோகிராபி)
AUDIO ENGINEERING
(ஆடியோ என்ஜினியரிங் )
ANIMATION (3D Studio Max Software)
(அனிமேஷன்)
மேற்கண்ட இலவச பயிற்சியில் சேர 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் பயின்ற, 18 முதல் 35 வயது வரை உள்ள, குடும்ப ஆண்டு வருமானம் ரூ1 லட்சத்திற்கு குறைவாக உள்ள கிருஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பயிற்சிக்கு நேர்காணல் வரும் டிசம்பர் 01 மற்றும் 02ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. நேர்காணலுக்கு செல்வோர்,
10th தேர்ச்சிபெற்ற மதிப்பெண் சான்றிதழ் (குறைந்தபட்சம்)
TC - school / Diploma / ITI / College
Community Certificate (ஜாதி சான்றிதழ்) - BC
வருமான சான்றிதழ் ( வருட வருமானம் லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்)
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
இவ்வனைத்து ஆவனங்களையும் ஒரு செட் நகல் (copy) மற்றும் verification (சோதனைக்காக) அசல் (original) சான்றிதழ்களையும் எடுத்துச் செல்லவேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு,
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) ,
கோ-ஆப் டெக்ஸ் வேர் அவுஸ் பில்டிங்,
முதல் மாடி,No.350,பாந்தியன் சாலை,
எழும்பூர்,சென்னை-600 008
போன்:044-2819 2407,2819 2506,2819 1203
என்ற முகவரிக்குத் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
பொதுமக்கள் நலன் கருதி இத்தகவலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் தந்துள்ளனர். |