தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில், தேசிய நூலக 44ஆவது வார விழா இன்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்கவுள்ளனர்.
இவ்விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, மாவட்ட நூலக அலுவலர் யசோதா, நாசரேத் அரசு மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சுவாமிதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
இவ்விழாவில் கலந்துகொள்ள வருமாறு நகரின் அனைத்து பொதுமக்களையும், விழாவை இணைந்து நடத்தும் அரசு பொது நூலகத்தின் காயல்பட்டினம் கிளை நூலக வாசகர் வட்டம், காயல்பட்டினம் அரிமா சங்கம், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
தகவல்:
ஆசிரியர் மு.அப்துல் ரஸாக்,
துணைத்தலைவர்,
வாசகர் வட்டம், அரசு பொது நூலகம், காயல்பட்டினம் கிளை. |