ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றம் சார்பில், அதன் நிறைகுறைகள் குறித்து உறுப்பினர்களின் கருத்துக்களை ஆய்ந்தறிந்திடும் பொருட்டு கருத்தாய்வு (சர்வே) நடத்த அம்மன்றத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அமீரக காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அமீரக காயல் நல மன்றத்தின் நவம்பர் மாத செயற்குழு கூட்டம் நவம்பர் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் மன்றத்தின் மூத்த உறுப்பினரும் ஆலோசனை கமிட்டி உறுப்பினருமான ஜனாப் ஹாஜி விளக்கு ஷேய்க் தாவூத் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு New Indian Model School முதல்வர் ஜனாப் ஜமால் அப்துல் நாசர் அவர்கள் தலைமை தாங்க, ஜனாப் நூஹு சாஹிப் அவர்கள் கிராஅத் துடன் இனிதே ஆரம்பமானது.
கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – பெருநாள் வாழ்த்து:
எதிர்வரும் ஈத் அல்அழ்ஹா இன்ப பெருநாளில் நம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் எல்லா வளமும் பெற்று இன்புற்று இருக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் செய்யும் அமல்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு நாம் கேட்கும் துஆக்கள் கபூல் ஆக அருள்புரிவானகவும். ஆமீன். உலகளாவிய காயலர்களுக்கு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் எங்களின் நெஞ்சார்ந்த "ஈத் முபாரக்".
தீர்மானம் 2 – நகர்மன்ற புதிய துணைத்தலைவருக்கு வாழ்த்து:
அண்மையில் நடைபெற்ற நகரமன்ற துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாப் பாம்பே முஹிதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
தீர்மானம் 3 – பொதுக்குழுக் கூட்ட ஏற்பாடுகள்:
ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கான ஏற்ப்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு மன்றத்தின் உறுப்பினர்களுக்கு எல்லா சௌகரியங்களும் செவ்வனே செய்து முடிக்க வலியுறுத்தப்பட்டது.
தீர்மானம் 4 – மன்றத்தின் நிறைகுறைகள் குறித்த கருத்தாய்வு:
மன்றத்தின் பொதுக்குழுவில் மன்றத்தின் செயல்பாடுகள், நிறை குறைகள், ஆலோசனைகள் போன்றவைகளை எல்லா உறுப்பினர்களும் தத்தம் கருத்துக்களை பதிவு செய்யும் வண்ணம் ஒரு சர்வே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் - விமரிசனங்களை மன்றத்திற்கு வழங்கி மன்றத்தின் செயல்பாடுகள் செவ்வனே நடந்தேற உதவுமாறு கேட்டுக்கொள்ப்படுகிரார்கள்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேநீர் விருந்துக்குப் பின், துஆவுடன் கூட்டம் அல்லாஹ் அருளால் நிறைவுற்றது.
இவ்வாறு அமீரக காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |