தீ விபத்து பற்றி தீர விசாரணை posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[14 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13346
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தீ விபத்து ஏற்பட்டதில் எவருக்கும் உயிர் சேதமோ , காயமோ ஏற்படாமல் பாதுகாத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்
அல்ஹம்துலில்லாஹ்!
தீ விபத்து நடந்த இடத்திற்கு சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர்ந்தபோதிலும், அதற்கு முன்பாகவே தைக்கா முழுமையாக எரிந்துவிட்டது என்பது கவலைக்குரியது.
அங்கிருந்த குர்ஆன் பிரதிகள், மவ்லித் நூல்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகியது வேதனைக்குரியது - பக்கத்து வீடுகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லையே ?.
-----------------------------------------------
தீ விபத்து பற்றி தீர விசாரணை :
தைக்காவிற்கு அருகிலுள்ள மின் கம்பத்திலிருந்து தீப்பொறி விழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தால் அதை ஏற்று பொருந்திக்கொள்ளலாம்.
ஆனால் விஷமிகள் யாரும், தீ வைத்துவிட்டு சென்றிருந்தால் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
இரவு 9.15 மணி என்பதால் இத்தோடு முடிந்தது , அதே நேரம் எல்லோரும் உறங்கி கொண்டிருக்கும் நடு இராத்திரி என்றால் அக்கம் பக்கத்து வீடுகளின் ஜன்னல் கதவுகள் எல்லாம் தீக்கிரையாகி இருக்கும்.
அவசியம் இந்த தீ விபத்து பற்றி தீர விசாரணை மேற்கொண்டு பிற்காலத்தில் இந்த மாதிரி விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பது நல்லது. வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross