Re:காயல்பட்டின குடிநீர் திட்... posted byM.I.மூஸா நெய்னா (மதினா முனவ்வரா )[15 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13402
ரஹ்மத்துல்லா ஹாஜி அவர்கள் சொல்வது போல் நமதூரின் சரித்திரங்கள், நமதூருக்காக பாடுப்பட்ட தன்னலமற்ற, சுயவிளம்பரம் விரும்பாத பெரியவர்களை பற்றி இப்போது உள்ள இளைஜர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. இங்கே கருத்து எழுதுபவர்கள் பலபேர் இன்னும் தேர்தல் நேரத்தில் உள்ள பகமையை கருத்தில் கொண்டு ஊர் பெரியவர்களை வசைப்பாடுவதிலேயே இந்த தளத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள். தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்வது என்பது எந்த ஒரு நகர்மன்ற தலைவரின் கடமைகளில் ஒன்று தான். இதை ஏதோ முன்பு யாரும் செய்யாத பெரிய சாதனையாக சித்தரிக்க வேண்டாம்.
தண்ணீர் பிரச்சனை மட்டுமல்ல எத்தனையோ முக்கிய பிரச்சனைகளை மறைந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தன்னலமற்ற, சுயவிளம்பரம் தேடிக்கொள்ளாத பெரியவர்கள் செய்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியாவிட்டாலும், ரஹ்மத்துல்லா ஹாஜி போன்ற பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, இனி மேலும் ஊரின் நலனுக்காக பாடுப்பட்ட, பாடுபடுகிற பெரியவர்களின் சேவைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross