செய்தி: ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்... posted bySabeer (Mumbai)[17 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13481
மெகாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட அத்துணை செய்திகளையும் எழுத்து வடிவில் செய்திகள் தந்தமைக்கு முதற்கண் நன்றி.
ஊடகத்தின் வாயிலாக நாம் கருத்துப்போர் செய்து வருவது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சிலர், கூறப்பட்டுள்ள விசயம் என்னவென்று சிந்திக்காமலே “எல்லாரும் விழிப்புணர்வுடன்தானே இருந்து வருகிறோம். பின்னர் எதற்கு இந்த கூட்டம்” என்ற ரீதியில் கேள்விக் கணை தொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஊர் நலனில் அக்கறை கொண்டுள்ள யாருக்கும் சரி இந்த கூட்டம்
அவசியமான ஒன்றாகத்தான் தெரியும்.
இது போன்றதொரு விழிப்புணர்வு கூட்டம் அடிக்கடி நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது நகர்மன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து உள்ளுர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும், அதையே பதிவேற்றம் செய்து இணையதளத்தில் வெளியிடவும் ஏற்பாடு செய்தால் பொதுமக்களும் மற்றும் கடல் கடந்து வாழும் காயல்வாசிகளும் நகர்மன்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
அவ்வாறு ஒளிபரப்ப வேண்டும் என்றால் அதற்கு எத்தகைய
முறையை கையாள வேண்டும். அட்மின் தயவு செய்து விளக்கம் தரவும். முறையாக நியமனம் செய்யப்படாத பணியாளர்கள் தங்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஊடகத்திற்கு செய்தியாக கொடுத்துள்ளதை கீழ்க்காணும் இணையதளத்தில் காணவும். இது பற்றிய செய்தி காயல் இணையதளத்தில் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.dinamalar.com/News_Detail.asp?
Id=292599&Print=1
http://kayalpatnam.com/m/shownews.asp?id=6914
நமது காயல்பட்டணம் நகராட்சி பற்றிய மேலதிக விபரங்களை காண
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross