செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிய நகர்மன்றத்தின் முதல... posted byBASHEER MARICAR (KAYALPATTINAM)[17 November 2011] IP: 180.*.*.* India | Comment Reference Number: 13495
காயல்பட்டணம் நகர்மன்ற தலைவி ஆபிதா அவர்களே.
உங்கள் தலைமையில் நடைபெற்ற முதல் நகர்மன்ற கூட்டத்தில் இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கு மொத்த திட்ட மதிப்பீடில் 80 சதவிதம் மத்தியரசும், 10 சதவிதம் மாநிலரசும், 10 சதவிதம் நகராட்சி பொது நிதியிலிருந்தும் நிறைவேற்றிடவும், முக்கியமாக இத்திட்டத்தை காயல்பட்டணம் நகராட்சியே இத்திட்டப்பணியாவையும் செய்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்.
தயவுசெய்து இந்நகராட்சியே இத்திட்டப்;பணியிணை செய்திட அனுமதி வேண்டி நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டுகிறோம். ஏனெனில் எந்தஒரு புதிய குடிநீர் திட்டத்தையும் தமிழகரசின் 95 சதவிகித உள்ளாட்சி (ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) அமைப்புகளுக்கு தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மூலமாகவே எந்தஒரு புதிய குடிநீர் திட்டத்தையும், பணிகள் செய்து முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டுவந்து, அவர்களே ஒருவருடத்திற்கு அத்திட்டத்தை (Maintenance) செயல்படுத்தி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பார்கள். இவ்வாறு முடிக்கப்பட்ட புதியகுடிநீர் திட்டங்களே மக்களுக்கு அக்குடிநீர் திட்ட ஆயட்காலத்திற்கும் பயன்னடைய வாய்புள்ளது.
ஆனால் இப்பணியினை அந்தந்த நகராட்சியால் புதிய குடிநீர் திட்டத்தை முழுமையாக முடித்து செயல்படுத்த நகராட்சியமைப்பில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மிக மிக குறைவு. இரண்டாம் குடிநீர் திட்டம் காயல்பட்டணம் மக்களின் கனவு, கானல்நீராகிவிடக்கூடாது. ஆகவே தாங்கள் இத்தீர்மானத்தை நகராட்சி தலைமையகத்திற்கு அனுப்புமுன் முன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (Project)அதிகரிகளிடம் இத்திட்டம் பற்றிய (DPR) முழுவிபரங்கள் தெரிவித்து ஆலோசனை பெற்று நம்நகராட்சியால் இப்புதியதிட்டத்தை பணிமுடித்து செயல்படுத்த முடியுமா என எல்லா சாத்தியகூர்களையும் ஆராய்ந்து முடிவுசெய்தபின் இத்தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுகிறோம்.
ஒருவேலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் ஆலோசனையில் இத்திட்டத்தை நம்நகராட்சியால் முழுமையாக செயல்படுத்தவது இயலாதது எனதெரிவித்தால் தாங்கள் உடனே நகர்மன்றத்தில் அவசரகூட்டத்திற்கு ஏற்பாடு செய்து நகர்மன்ற உறுப்பினர் அனைவர்களுக்கும் நம்நகராட்சியால் இத்திட்டத்தினை செயல்படுத்தமுடியாத சாத்தியகூர்களை அவர்களிடம் எடுத்துகூறி அக்கூட்டத்திலேயே இத்திட்டத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகவே செயல்படுத்திதர வேண்டி திர்மனம் நிறைவேற்றிட வேண்டுகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross