செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒப்பந்தக்காரர் தரும் சிறு அன்பளிப்புக்காக அனுபவம் இல்லாத ஒப்பந்தகாரர்களிடம் இந்த பல கோடி திட்டம் போகாமல் தடுக்க பட வேண்டும்...! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[17 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13506
இந்த திட்டத்தினால் தானும் பயன் பெற அணைத்து சமூகமும் பயன் பெற இத்திட்டத்திற்குத் தேவைப்படும் தொகையில் ரூ.50 லட்சத்தை நமது நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்கள் நன்கொடையாக கொடுத்திருப்பது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது முதலில் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
சகோதரர் மு.அ.பஷீர் மரைக்கார் அவர்களின் கருத்து 100 சதவீதம் சரியானதே... இவ்வளவு பெரிய தூர அளவு திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகவே செயல் படுத்துவது சிறந்தது... ஊரில் ரோடு போடுபவர், சிறிய தொட்டியில் இருந்து குழாய் அமைத்து கொடுபவர்கள் இவர்களுக்கு இந்த பல கோடி மதிப்புடைய ஒப்பந்தத்தை கொடுப்பது குரங்கின் கையில் பூமாலையை கொடுப்பதாகவே அமையும்.. உதாரணம் நமதூரில் சிமென்ட் ரோடு போட்டு அதன் இன்றைய நிலைமை நமக்கு ஒரு முன் மாதிரி அறிவோம்..
ஒப்பந்தக்காரர் தரும் சிறு அன்பளிப்புக்காக அனுபவம் இல்லாத ஒப்பந்தகாரர்களிடம் இந்த பல கோடி திட்டம் போகாமல் தடுக்க பட வேண்டும்...!
இந்த விசியத்தில் அணைத்து ஜமாஅத், பொதுநல சங்கங்கள், புறநகர் ஊர் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவர்களும் இந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய 2ஆவது பைப்லைன் திட்டத்தில் மிக அக்கறை செலுத்த படவேண்டும் சும்மா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் தலைவர், துணை தலைவர், அணைத்து வார்டு உறுப்பினர்கள் எல்லோரையும் ஒரு பொது இடத்தில் அழைத்து அணைத்து ஜமாஅத், பொதுநல சங்கங்கள், புறநகர் ஊர் தலைவர்கள் இப்படி பிரதிநிதிகள் அமைத்து பேசி (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகவே இத்திட்டத்தை செயல் படுத்த) நல்ல தீர்வுக்கு முயற்சி செய்ய வேண்டும்...!!
தேர்தல் நேர கசப்புகளை மறந்து அனைவர்களும் ஊர் குடிநீர் விசியத்தில் அக்கறை செலுத்துமாறு மிக தாழ்மையுடன் உங்களை கேட்டு கொள்கிறேன்...
இதை படிக்கும் அணைத்து வாசகர்களும் உங்களின் யோசனையில் படும் கருத்துகளை பதிவு செய்து ஊர் நலனுக்கு உதவுமாறு எனது தாழ்மையான வேண்டுகோள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross