செய்தி: எல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் புத்தக கண்காட்சி! சுமார் 2 ஆயிரம் புத்தகங்களை மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் வாங்கினர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
I.A.S. மற்றும் I.P.S. படிப்பதற்கு ஆர்வம் உண்டாகும். posted byN.S.E. மஹ்மூது (KAYALPATNAM)[18 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13556
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பு மாணவ மணிகளே!
புத்தக கண்காட்சியில் நல்ல பயனுள்ள நூற்களை வாங்கி சென்றிருப்பது சந்தோசத்தை அளிக்கிறது.
புத்தக கண்காட்சி நடப்பது இந்த மாமாக்கு தெரியாது, தெரிந்திருந்தால் எனக்கும் பல புத்தகங்கள் வாங்க வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
------------------------------------------
அறிவாற்றலை வளர்க்க :
மாணவமணிகளே! புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் சிறந்த பழக்கம் - பாட புத்தகமல்ல அதை அடியேன் சொல்ல வேண்டிய அவசியமில்லை - நீங்கள் எல்லாம் சமர்த்து பிள்ளைகள் நன்றாகவே படித்து நல்ல மார்க்குகள் வாங்குவீர்கள் அது எனக்கு நன்றாக தெரியும்.
அடியேன் சொல்லுவது பொது அறிவு சார்ந்த நல்ல பயனுள்ள நூற்களை படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்பதை.
பள்ளிக்கூட பாடங்களை படிப்பதோடு நேரம் கிடைக்கும்போது / விடுமுறை நாட்களில் தேவையற்ற கதை / நாவல் புத்தகம் படிப்பதை விட ஒழுக்க நெறிகளை / அறநெறிகளைப் பேண - அறிவாற்றலை வளர்க்க தேவையான சிறந்த புத்தகங்களை வாங்கி படித்தால் நல்ல பண்பாடுகளை வளர்க்க முடியும்.
----------------------------------------------
I.A.S. மற்றும் I.P.S. படிப்பதற்கு :
பள்ளிப் பருவத்திலேயே நல்ல நூற்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் - அதை தொடர்ந்து நூலகங்களுக்கு சென்று அங்குள்ள பொது அறிவு நூற்களை படிக்க ஆர்வம் ஏற்படும் - அதன் மூலம் நீங்கள் மிகச் சிறந்த வாய்ப்புக்களை பெற்று முன்னேற்றம் அடையலாம்.
அறிவு சார்ந்த நூல்களை மிக ஆர்வமாக படிக்கும்போது இன்ஷா அல்லாஹ்! நீங்கள் I.A.S. மற்றும் I.P.S. படிப்பதற்கு விருப்பம் உண்டாகும்.
யார் ஒருவர் I.A.S. அல்லது I.P.S. படிக்க விரும்புகிறாரோ அவர் நிச்சயமாக பொது நூலகங்களுக்கு சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வார் என்பது திண்ணம்.
---------------------------------------
ஆகவே மாணவர்களே!
நீங்கள் படித்து முடியும் வரை தொலைகாட்சி பெட்டிப் பக்கம் செல்லாமல் - பொது நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு பொது அறிவை வளர்த்துக்கொண்டால் - வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.
இறைவனின் அருள் என்றும் உங்கள் மீது உண்டாகட்டுமாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross