செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ரூபாய் 50 லட்சம் நன்கொடை இவர்கள் ஆளாளுக்கு பங்கு போடுவதற்க்கு அல்ல..! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[19 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13590
ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொது மக்கள் நிச்சயம் 2ஆவது பைப்லைன் திட்டத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்... ! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் அந்த ஜமாஅத்துக்கு உட்பட்ட ஏரியா வார்டு உறுப்பினரை கூப்பிட்டு ஜமாஅத்தில் கூட்டம் போட்டு இந்த மிக பெரிய (ரூபாய் - 30 கோடி) குடிநீர் திட்டத்தை நல்ல திறம்பட செய்யக்கூடிய அனுபவம் மிகுந்த தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமே செய்ய பட வேண்டும் என நகர்மன்ற உறுப்பினரை ஜமாஅத் வலியுறுத்தி நல்ல தீர்வு ஏற்பட வழி செய்ய வேண்டும்... அப்போது தான் சரியான முறையில் இந்த பல கோடி திட்டம் நல்ல தரம் மிகுந்ததாக அமையும்...
இல்லையெனில் உறுப்பினர்கள் இங்குள்ள தனியார் ஒப்பந்தகாரர்களின் அன்பளிப்பை வாங்கி பங்கு போட்டு கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள் என்பதில் சிறு அளவும் சந்தேகமில்லை...
ஊரின் குடிநீர் நலனுக்காகவே நமது நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்கள் ரூபாய் 50 லட்சம் நன்கொடையாக கொடுக்கிறார்கள்.. இவர்கள் ஆளாளுக்கு பங்கு போடுவதற்க்கு அல்ல..!
நமது பல வருட குடிநீர் கனவு வீண் போய்விடாமல் (ஜமாஅத்) நாம் இதில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross