செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பட்டிமன்றம் நடத்த முடியாது .நகர் மன்றம்தான் தீர்மானிக்க முடியும்..இதில் ஒருமித்த கருத்து இல்லையெனில் பெரும்பான்மை பலம்தான் தீர்வு. posted byV.D.SADAK THAMBY (Guangzhou (China))[20 November 2011] IP: 219.*.*.* China | Comment Reference Number: 13596
இரண்டாம் குடிநீர் திட்டம் எவ்வாறு நிறைவேற்றுவது? நகராட்சியே நேரடியாகவா? அல்லது தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலமா ?
நாம் இதை வலைதளங்களின் வாயிலாக பட்டிமன்றம் நடத்தி தீர்மானிக்க முடியாது. இதை முடிவு செய்யும் இடம் நகர்மன்றம்தான் .நகர் மன்றத்தில் ஒருமித்த கருத்துடன் இதை முடிவு செய்வதுதான் ஏற்புடையது. ஒருமனதாக முடியாவிட்டால் பெரும்பன்மைதான். வேறுவழியில்லை.
ஒவ்வொரு விஷயத்திற்கும் சர்ச்சையை உண்டாக்குவதால் , அது நடைபெறாமல் போகும் சாத்தியம் உள்ளது.
வலைதளங்களில் நாம் கருத்து தெரிவிக்கலாமே ஒழிய நம் கருத்தை திணிக்க முயற்சிக்கக்க்கூடாது .
எவ்வழியில் செயல்பட்டாலும் ஊழல் எப்படியும் இருக்கும்.இதில் பாகுபாடு இருக்க முடியாது.
நம் நகர்மன்றம்/தலைவி இப்போது ஒரு வழிகாட்டுதலின்றி தவிப்பதுபோல தெரிகிறது. முன்பு ஐக்கியபேரவை போன்று ஒரு பலமான அமைப்பு வழிகாட்டியது. இப்போது அது சற்றே விலகி இருந்து நிலைமைகளை அவதானிக்கிறது (விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டாம் என்பதற்காக).
எனது கருத்தின்படி, நகர் மன்ற தலைவர் மீண்டும் ஐக்கிய பேரவையின் ஆலோசனையை பெற்றால் (அல்லது) ஐக்கிய பேரவை மீண்டும் முன்போல ஊர்நல திட்டங்களுக்கு நகரமன்ற தலைவருக்கு வழிகாட்டுதல் செய்தால் , இதுபோன்ற மாபெரும் திட்டங்கள் சிறப்பாக செயல்படும்.
முக்கியமாக , நகர் மன்ற தலைவருக்கும் தீய சக்திகளின் தொல்லைகளிலிருந்து இதன்மூலம் ஒரு பாதுகாப்பு கிடைக்கும்..
நகர் மன்ற தலைவரும், ஐக்கிய பேரவையும் பொது நன்மையை கருதி இணைந்து செயல்படலாம். நகர் மன்றதலைவி வயதில் இளையவராக இருப்பதால் , அவரே முதலில் ஐக்கிய பேரவையின் உதவியை நாடலாம். இருதரப்பினரும் egoism பார்க்கக்கூடாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross