நகரமன்ற தலைவர் திருமதி ஆபிதா அவர்களை நீங்கள் நடத்தும் இவ்விழாவில் பங்கு பெற செய்யாமல் இருந்ததின் உங்கள் உள் நோக்கம் என்ன..? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[21 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13630
நூலக வாசகர் வட்டத்தின் மேல் உள்ள அனைவர்களின் நன்மதிப்பும் போய்விட்டது என்றே கருதுகிறேன்.. சில சுய நல வாதிகளின் சுய வட்டத்துக்குள் நூலக வாசகர் வட்டம் செயல் பட்டதினால்..!
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் தேசிய நூலக 44ஆவது வார விழா..! தனியார் நடத்தும் நூலக விழா அல்ல...!
நகர்மன்ற தலைவர் ஆபிதாவின் தந்தை பாளையம் இப்ராஹீம் அவர்கள் பல வருடம் முன் காயல்பட்டின கிளை நூலக வாசகர் வட்டத்தை நிறுவியவர் (நிறுவனர்) மேலும் நூலக வாசகர் வட்டத்தின் (தலைவர்) தலைவரும் ஆவார் சில மாதமாக அவர் உடல் நல குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார் அவரால் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கலாம் ஆனால் ஓய்வில் இருக்கும் நூலக வாசகர் வட்ட தலைவரின் மகள் சமூக சேவகி இந்நாள் நகரமன்ற தலைவர் திருமதி ஆபிதா அவர்களை நீங்கள் நடத்தும் இவ்விழாவில் பங்கு பெற செய்யாமல் இருந்ததின் உங்கள் உள் நோக்கம் என்ன..?
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் பழையதை (நூலக வாசகர் வட்டத்தை நிறுவியவரை) மறந்து இன்று புதியதாக காட்சி தரும் சுய நல செல்வந்தர்கள் பின்னால் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்... இந்த செயல் வாசகர்கள் அனைவர்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது...
நூலக வாசகர் வட்ட நிறுவனர் மற்றும் அதன் தலைவர் ஜனாப் பாளையம் இப்ராகிம் அவர்களின் மகள் திருமதி ஆபிதா அவர்களை இவ்விழாவில் பங்கு பெற செய்யாமல் இருந்ததில் உங்கள் காரணங்கள் மற்றும் கருத்துக்களை இங்கே பதிவு செய்து விளக்கம் தர முடியுமா ? என வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆசிரியர் அப்துல் ரஸாக் அவர்களையும் மற்றும் அரசு நூலகர் அன்பு தம்பி முஜீப் அவர்களையும் மிக தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross