Re:நகர்மன்ற உறுப்பினர்கள் தொ... posted bymackie noohuthambi (kayalpatnam)[23 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13720
சகோதரர் லுக்மான் அவர்கள் எப்போதும் முன்னிலைதான். தேர்தல் அறிக்கைவிடுக்கும்போது, தான் தேர்ந்தேடுக்கப்பட்டால் என்ன செய்வேன் என்ன செய்யமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தனது நிலைப்பாட்டை முதன்முதலில் சொன்னவர் அவர்தான்.
துளிர் கேளரங்கில் நடைபெற்ற உறுப்பினர்கள் அறிமுக விழாவில் சகோதரி ஆபிதாவிடம் நான் ஒரு கடிதம் கொடுதேன்.
நகரமன்ற தலைவர் மின்னஞ்சல், நகரமன்ற மின்னஞ்சல், நகரமன்ற இணையத்தளம் உடனடியாக மக்களுக்கு அறியத்தரவேண்டும், மாதம் இருமுறை நகரமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகேட்க ஒரு நேரத்தை, ஒரு நாளை ஒதுக்கி ஒரு இடத்தில மக்களுக்காக காத்திருக்க வேண்டும், நகரமன்ற தலைவி அவர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை திறந்தவெளியில் கூட்டம் போட்டு நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அவை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லை என்றால் அதற்கு என்ன காரணம், மக்கள் அதற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்றவற்றை மக்கள் முன் எடுத்து சொன்னால் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஒத்துழைப்புதர உதவியாக இருக்கும் என்று நீண்ட கோரிக்கை கொடுத்தேன்.
தலைவர் அதை கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. சகோதரர் லுக்மானை தொடர்ந்து எல்லோரும் இந்த தகவல்களை தருவார்கள் என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டுள்ளது. என்றாலும் நகரமன்ற தலைவர், துணை தலைவர் இதற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
அதே சமயம் விமர்சனம் எழுதுபவர்கள் நாகரிகமாகவும் ஆக்கப்பூர்வமான யோசனைகளாகவும் சொல்லுங்கள். தனிமனித உணர்வுகள் காயப்படாமல் உங்கள் கருத்துகளை வெளியிடும்படியும் வேண்டிகொள்கிறேன். நன்றி,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross