செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சில கமெண்ட்ஸ், சில கேள்விகள். posted bySaalai.Abdul Razzaq Lukman (Dubai)[24 November 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13751
அஸ்ஸலாமு அலைக்கும்.
நகராட்சி துணை குழுக்களுக்கு நடந்து முடிந்துள்ள தேர்தல் குறித்து சிலரின் comments எனது கேள்விகள். உரியவர்கள் பதில் அளித்தால் எல்லாரும் புரியலாம்.
நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில், தலைவிக்கு பொறுப்புக்கு, ஐக்கிய பேரவையின் தவறான முடிவால் சகோதரி ஆபிதா, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது முடிந்து போன சம்பவம்.
ஆனால் அதே மாதிரியான முடிவுகள் தான், நகரமன்றத்தின் மற்ற தேர்தல்களிலும் எதிர்பார்ப்பது விந்தை.
சிலரின் comments
".யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட
யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி". comment# 13672
"ஊழல் அதிகம் நடைபெற வாய்ப்புள்ள பணியாளர்கள் நியமன குழுவிற்கு - ஊழலைத் துணிவாக எதிர்கொள்ள உறுப்பினர் லுக்மான் பொருத்தமானவர் என்றும், வார்ட் 13 உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீனை அவர் விருப்பப்படி துணைத் தலைவர் பதவிக்கு முன் மொழியலாம் என்றும் அவர்கள் இருவரின் அணிகளும் முடிவு செய்ததாகத் தெரிகிறது." News ID # 7463.
சகோதரர் லுக்மான் காக்கா அவர்களே, உங்கள் அணி முடிவு செய்யலாம், அனால் எதிர் அணியினர் முடிவு செய்ய கூடாதா?
"இப்போது முடிவு செய்யுங்கள்
நரகத்தின் அடிதட்டா
சொர்கத்தின் மேல்தட்டா", comment# 13672
நீங்கள் வெற்றி பெற்றால் சொர்கத்தின் மேல் தட்டு, நீங்கள் தோற்கடிக்கபட்டால், எதிர் அணியினருக்கு நரகத்தின் அடித்தட்டு. நன்றாக இருக்கிறது உங்களின் ஆசை.
அடுத்து என் சாளை தம்பி நவாஸ் உடையது:
"தகுதி இல்லாதவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் போது கியாமத் நாளை எதிர் கொள்ளுங்கள் என்ற ஹதீத்தான் நினைவுக்கு வருகிறது". Comment# 13692
இங்கே தகுதி இல்லாதவர்கள் (உன் பார்வையில்) யார்? அதற்கான உன் அளவுகோல் தான் என்ன?
கடந்த நகராட்சியில் உறுப்பினராக இருந்து இந்த தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்றவர் இருவர். அதில் ஒருவர் தற்போதைய துணை தலைவர்,சகோதரர் மும்பை முகியதீன். மற்றபடி அனைவருமே பரீட்சை வைக்கபடாத புதியவர்கள்.
அடுத்து சகோதரர் வாஹித் அவர்களுடையது.
"5 வேலை தொழக்கூடிய படித்து பட்டம் பெற்ற ஒரு சகோதரரும், சகோதரியும் தோற்றுவிட்டார்கள். Thanks to the Financier"; comment# 13656
5 வேளை தொழுகையும் உங்கள் முன்னால் தொழுதால் தான் தொழுகையாளியா?. 5 வேளை தொழுது விட்டு, அல்லாஹ்வின் பெயரை சொல்லி அடித்த பித்தலாட்டங்கள், பொய் சத்தியங்கள், forgery, ஆகியவை அனைவரும் அறிந்ததே.
சகோதரர் ஆதம் சுல்தான் அவர்களின் comments:
விமர்சனம் எழுதும் ஒரு சில சகோதரர்களே. சற்று பொறுத்திருந்து பாருங்கள்.
எல்லோருடைய எதிர்பார்புக்கேற்றவாறு எல்லா உறுப்பினர்களும் செயல்படுவார்கள் என்று நம்புவோமாக! Comment# 13731.
இவர்களின் நம்பிக்கை நிறைவேற வல்ல அல்லாஹ்விடம் நானும் பிரார்த்திக்கிறேன்.
முத்தாய்பாக 5 -ம் வார்டு உறுப்பினர், தம்பி ஜகாங்கீர் அவர்களின் கமெண்ட்ஸ்# 13744, குற்றசாட்டு பற்றி, சகோதரர் லுக்மான் காக்கா அவர்கள் விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறேன்.
நாம் ஆதரிக்கும், விரும்பும், நபர் வெற்றி பெற வேண்டும் என ஆசைபடுவதில் தவறில்லை. அப்படி நிறைவேறாத பட்சத்தில், மாற்று அணியினரை தவறாக சித்தரிக்க வேண்டாம்.
பொறுப்புக்கு வெற்றி பெற்ற உறுப்பினர்களே! உங்களின் செயல்களை வல்ல அல்லாஹ்வும் பார்த்து கொண்டிருக்கிறான், மக்களும் பார்த்து கொடிருக்கின்றனர்.
கடைசியாக, தற்போது மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். மீடியா, வலைத்தளம் கண்கொத்தி பாம்பாக இருக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் இருக்கிறது. குறிப்பாக சகோதரர் லுக்மான் காக்கா மற்றும் தலைவி போன்று ஊழலை வேரோடு அழிக்க ஆட்கள் இருக்கின்றனர்.
நகராட்சியில், அதிகாரிகள், தலைவி உட்பட அனைத்து உறுப்பினர்கள் யார் தவறு செய்தாலும், ஆதாரத்துடன் மக்கள் மற்றும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். அவர்கள் உண்மையிலே தவறு செய்திருந்தால், இவ்வுலகில் சட்டத்தின் முன்பும், மறுமையில் வல்ல அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. மாறாக நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக யார் மீதாவது அபாண்டமான குற்றசாட்டை சொன்னால், அதற்கும் மறுமையில் தண்டனை உண்டு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross