Re:நகரில் ஒருவழிப்பாதை தவிற்க முடியாததுதான் posted byV D SADAK THAMBY (Guangzhou ,China)[28 November 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 13853
நம் ஊருக்கு நிரந்தரமான போக்குவரத்து/பேருந்து வசதி வேண்டுமெனில் நாம் ஒருசில வசதி குறைவுகளை பொறுத்துதான் ஆக வேண்டும்.
கூலக்கடை பஜாரையும் பேருந்து போக்குவரத்திற்கு திறந்து விடவேண்டும். மெயின் ரோட்டையும் நாம் விரிவுபடுத்துவதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றியே ஆகவேண்டும். அப்போதுதான் எழிதான வாகன போக்குவரத்து நம் ஊரில் அமையும். அனைத்து பேருந்துகளும் நம் ஊர் வழியாக செல்லும் வாய்ப்பு நிரந்தரமாக ஏற்படும்.
இல்லையெனில், துளிர் ஸ்கூலில் இருந்து தெற்கு நோக்கி பிரிந்து ஓடக்கரை தாண்டி வந்து சேரும் விதமாக மற்றொரு byepass சாலை அமைக்கலாம். இதனால் இப்பகுதி தனியார் நில சொந்தங்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும். இது குறைவான பாதிப்புதான்.
இதற்கும் நாம் சம்மதிக்கவில்லை எனில், அனைத்து விரைவு பேருந்துகளும் அடைக்கலாபுரம் வழியாக இயக்கப்படும் சாத்தியமுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross