kayalthe great posted bymohmed younus (Chennai )[03 December 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 1390
உண்மையில் இவ்வளவு சிறப்பான கூட்டத்தை பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நமது ஊரை போல வெளி நாடுகளில் வாழும் மற்ற எந்த ஊர் மக்களாலும் இவ்வளவு சிறப்பான சேவைகளை செய்கிறார்கள் என்று நாம் கேள்வி பட்டது இல்லை. நமது ஊரை போல மேலும் பொருள் செல்வத்திலும்,செல்வாக்கிலும் அதிக பலமுள்ள கீழக்கரை மக்களால் கூட இது போன்ற சேவைகளையும்,ஒன்று கூடலையும் நடத்தி காட்டுவர் என்பது சந்தேகம் தான் , நான்கு பேர் ஒரு ஊரில் இருந்தால் கூட, நல மன்றங்களை ஏற்படுத்தி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றதே! எல்லா புகழும் அல்லாஹுவுக்கே.
இன்றைய காலத்தில் நூறு பேரு இருந்தால் கூட மாதம் ஐந்து கொலைகளும், கொள்ளைகளும் நடக்கும் நேரத்தில், ஐம்பது ஆயிரம் பேர் வாழும் ஊரில் அத்தி பூத்தாற்போல் நடக்கும் சில அசம்பாவிதங்கள் நமது ஊரின் பெருமையும் கெடுக்கும் அளவில் கோல் கிடையாது.
என்னதான் வீட்டுக்கு வீடு டிவி இருந்தாலும், நண்பர்களே!தியேட்டர் சென்ற படம் பார்க்கும் கலாச்சாரம் வேறு.
தியேட்டரில், மஜீத் மக்ழரியும், ஹாமித் பக்ரியும், அஹ்மத் அப்துல் காதிர் ஆழிமும் பாயான் செய்ய மாட்டார்கள்.
நண்பர்களே! அன்று சன் டிவியின் நிகழ்ச்சிக்கு பிறகு இப்படியும் ஒரு நகரம் இந்த காலத்திலும் உண்டா என்று வியந்தவர்கள் ஆயிரம் பேர்.
நமதூரை சுற்றியுள்ள ஊர்களில் வேலை பார்க்கும் மாற்று மத சகோதர்கள் கூட காயல்பட்டினத்தில் வீடு கிடைக்காதா என்று விரும்புவது, நமது ஊரில் நிலவும் அமைதியும் பாதுகாப்பும் தான் தன காரணம்.
எதோ இரண்டு வீடுகளுக்கு இடையில் நடக்கும் முடுக்கு சண்டையை கரணம் காட்டி முடுக்கின் அவசியத்தை சிலர் குறைத்து மதிப்பிடுவது உண்டு. ஆனால்,இந்த அமைப்பை கண்ட ஒரு ஆந்திர தோல் வியாபாரி இந்த முடுக்கு அமைப்பை படமாக ஆக்க விரும்பினார்.
எவ்வளவோ கூறலாம். தயவு செய்து,ஊரின் சிறுமையை மட்டும் கூறாதீர்கள். இந்த ஊரில் பிறக்க அல்லாஹ் நமக்கு தந்த வாய்ப்புக்கு நன்றி கூறுங்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross