Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[29 November 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13908
சகோதரர் அஹ்மத் அவர்களிடமிருந்து கீழ்க்கண்ட பதில் எனது சொந்த ID க்கு வந்தது.
"சரி சந்தோசம். கருத்து வேறுபாடு வரும் என்று கருதியே அடி குறிப்பு எளிதினேன் . என் கருத்தில் தவறு இருந்தால் அட்மின் கத்திரி போட்டு இருப்பாரே ? சிந்திக்க வில்லையா சகோதரே ???
என் கருத்துடன் உங்கள் கருத்தை ஒரு அலசல்.
1. பொது கூட்டத்திருக்காக வள்ளல் சீதக்காதி திடலை மறந்து விட வேண்டும்
1 . ஊர் மக்களில் தேவைகளும், சீரான போக்குவரத்தும்தான் முக்கியமே ஒழிய, சீதக்காதி திடலில் அரசியல் மீட்டிங் நடக்காமல் எந்த குடியும் மூழ்கிவிட போவதில்லை. 4 விபத்துக்கள் தடுக்கப்படும் போது இந்த சீதக்காதி திடல் கூட்டம் ஊரில் வேறு 100 திடல்களில் நடத்தினால் ஒன்றும் தப்பில்லை. .
1 100 திடல்???? நீங்கள் சென்ற 10 திடல்களை இங்கு சொல்ல முடியுமா ?
***************************************
2 LK லெப்பை தம்பி சாலையில் அமைந்துள்ள ELKAY தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சற்று இடையூறுதான்.
2 . எந்த ஆசிரியர் மாணவருக்கும் இதனால் இடையூறு வர போவதில்லை, வேணும்டா அவங்க ஈசியா அங்க இருந்து கூட அவங்க ஊருக்கு பஸ் பிடிச்சி ஏறி போய்டலாம்.
2 உங்க ஊருக்கு நீங்கள் பஸ்லதா போவீர்களா ???
*****************************************
3 கூலக்கடை பஜார்-ல் இனி இரு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாது.
3 . எதற்கு 4 சக்கர வாகனங்களை கூலக்கடை பஜாரில் நிறுத்தி வைக்கணும். அது என்ன டாக்ஸி ஸ்டாண்டா?
3 ஊருக்கு சென்று கூலக்கடை பஜார் ஐ சென்று பார்த்தால் தானே தெரியும். டாக்ஸி ஸ்டாண்டா? அல்லது கூலக்கடை பஜாரா என்று ?
5 சிறமம் இன்றி பஸ் திரும்புவதர்க்கு தாயும் பள்ளி வழியாக வரும் வளைவில் இருக்கும் இரு வீடுகளை உடைக்க வேண்டியது இருக்கலாம்
5 . எந்த சிரமனும் இல்லாமல் இப்போதும் தாயும் பள்ளி முனையில் லாரி, ஸ்கூல் பஸ் எல்லாம் திரும்பிட்டு தான் இருக்கு. எதையும் உடைக்க தேவை இல்லை (ஹை-வே நிலம் ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் தவிர)
5 தாயும் பள்ளி வழியாக வரும் வளைவில்... தாயும் பள்ளி அருகேயே நிற்காதிர்கள். சற்று மேலே நகர்ந்து வந்து பாருங்கள்.
9 அத்தெருவில் உள்ளவர்கள் இனி KTM தெரு அல்லது வன்னார்குடியைச் சுற்றிதான் தங்களது வீட்டிற்கு செல்ல முடியும்.
9 . அத்தெருவில் உள்ளவர்கள் KTM தெருவை சுற்றிதான் போகணுமாம். ...நடந்து போறவருக்கு ஒன் வே ப்ரோப்ளம் இல்லை பிரதர்... பைக் கார் லே போகும் பொது தான் one -way ..காரில் போகும் போது KTM வழி சுற்றி போனால் ஒன்னும் கேட்டு விட போவதில்லை.
9 பெட்ரோல் இருக்கும் விலைக்கு ஊரை சுத்தி போக நாங்கள் சவுதியில் ஒன்றும் இல்லை.
11 அரசு இடத்தில் தற்போது கட்டிடங்களை கட்டி இருப்பவர்கள் அல்லது ரோட்டை அகலப்படுத்த அரசு கேட்கும் இடங்களுக்கு உரிமைக்காரர்கலே தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி பாதையை ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற கருத்தும் உள்ளது
11 . அரசு இடத்தில யாரும் கட்டிடம் கட்டி KTM தெருவில் இருக்க வில்லை.. யாருக்கும் பயமும் இல்லை....வீண் பயம் உங்களுக்கு தான். அதை இடிப்பான் இதை இடிப்பான் என்று!!
11 KMt - தாயிம் பள்ளி & தாயிம் பள்ளி - அல்ஜாமில் அஸ்கர் வரை உள்ள ரோட்டின் அகலம் உங்களுக்கு தெரியுமா ?
மூப்பனார் ஓடை எங்கு இருந்து எங்கு வரை என்று தெரியுமா ?
15 வீடு கட்டுபவர்கள் கல், மண் , செங்கலை போடுவதற்கு இடம் தேடவேண்டியது இருக்கும் .
15 . வீடு கட்ட கல் மண் செங்கல் போட முடியாதாம்....என்ன கவலை உங்களை சொல்லி வேலை இல்லை இதுக்கு இடம் கொடுத்த நம்ம பஞ்சாயத்தை சொல்லணும்... ஆமா எங்க தெருவில் எல்லாம் வீடே கட்டவில்லை பாருங்கோ!! நாங்கள் எல்லாம் கற்கால மக்கள் இன்னும் களிமண் வீட்டில் தானே இருக்கோம்..
15 நீங்கள் வீடு கட்டி பார்த்த பின்பு சொல்லுங்கள். உண்மையை சொன்ன ஒத்துகொள்ள வேண்டும் நண்பரே!!!
எதோ நல்லது நடக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று இருக்கும் பொது எதையாவது சொல்லி அரசியல்வாதி போல குழப்பிக்கொண்டு இருக்காதீர்கள்!!
எதோ நல்லது...அரசியல்வாதி போல குழப்பம் செய்வது நீங்களா ?அல்லது நானா ?
இதற்கு தான் நான் கருத்து வேண்டாம் என்றேன் கேட்டிங்களா ?
மேலே குறிப்பிட்ட பதில் எனது சொந்த e -mail Id க்கு வந்துள்ளது சகோதரர் அஹ்மத் அவர்களிடமிருந்து. படித்து பார்த்து அவரது சுய நலத்தை புரிந்து கொள்ளலாம்.
ஒரு வழி பாதையாக்கினால் சீதக்காதி திடலிலும் கூட்டம் நடத்தலாம் அதற்கு ஒன்றும் இடைஞ்சலில்லை , அது போக ஊரில், Y.U.F திடல் உள்ளது, சுலைமான் ஒலியுல்லாஹ் திடல் உள்ளது,கடற்கரை பூங்கா திடல், ஜலாலியா, பெரிய சதுக்கை அருகில் , U.S.C, K.S.C இப்படி எத்தனையோ இடத்தில பொதுக்கூட்டம், நடைபெறுகிறது. மார்க்க சம்பத்தப்பட்ட கூட்டங்கள், ஜாவியா, மஹ்லரா, புஹாரிஷரீப், IMM, இப்படி பலஇடங்களில் நடக்கிறது தெரிந்துகொள்ளுங்கள்.
சில மாணவர்கள் தற்போதும் நமதூரின் கடையக்குடி, கோமான் தெரு போன்ற இடங்களுக்கு செல்ல டவுன் பஸ்ஸை உபயோகிக்காமலில்லை.
இருவழி சாளையாக உள்ள மெயின் ரோட்டையே இருசக்கர வாகனகள் சரக்கு லாரிகள் நிறுத்தும் போது இங்கும் இது ஒன்றும் தடை படாது எல்லாவற்றிற்கும் மேலாக இரு சக்கர வாகனங்களுக்கு தனி பார்க்கிங் பேருந்து நிலையத்தோடு உள்ளது, தெரிந்து கொள்ளுங்கள்.
பாயிண்ட் 4 ல் ,தங்கள் பதில் தாங்கள் ஒரு சுய நலத்தோடும் அகங்கார தோடும் பதிலளிப்பது தெரிகிறது மெயின் ரோட்டிலும், ஹஜியாப்பா தைக்கா, K.T.M. தெருவிலும் குழந்தைகள் இருப்பதை ஊர் சென்று பாருங்கள், குழந்தைகள் மருத்துவ மனையும் உள்ளது என்பதனை உணருவீர்கள்.
K.T.M,தெருவிலும், MAIN ரோடிலும், ரோட் போட்ட சமயத்திலும், மரம் விழுந்து போக்கு வரத்து தடைபட்ட நேரத்திலும், தாங்கள் குறிப்பிடும் நெசவு தெரு வழியாக தான் பேருந்துகள் சென்றன, அதுவும் இருவழி தடமாக. அப்போது தாயிம் பள்ளி ஒன்றும் இடிபட வில்லை.
நாங்கள் திருமணம் முடித்து பெண்வீட்டிற்கு சென்று விட்டாலும் எங்கள் தங்கை மார்களின் கணவர் (மச்சான்மார்) எங்கள் வீட்டிற்கு வந்து மருமக்களோடு சுபமாக வாழ்கிறார்கள். பூனை கண்ணை மூடி விட்டால் உலகமே இருட்டாகிவிட்டது என நினைக்குமாம்.
உங்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் விலை, இன்றுவரை அனுபவிக்கும் கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, நெய்னார் தெரு, கோமா தெரு இவர்களெல்லாம் என்ன பாடு படுகிறார்கள். ஆட்டோ விற்கு பணம் கொடுத்து. அப்படி தாங்கள் கஷ்டப்பட தேவையில்லை, பல சந்துகள் (முடுக்குகள்) இன்றும் உள்ளது.
K.T.M தெருவில் என்க்ரோச்மென்ட் என சமீபத்தில் சில வீட்டு பால்கனிகள் மட்டுமே உடைக்க பட்டன தெரிந்து கொள்ளுங்கள்.
இது போன்று தாங்கள் பதிலில் குறிப்பிட்டது எல்லாம் சுய நல கருத்துக்களே!
எனவே ஊரின் நலன் கருதி தாங்களே முன்னின்று தங்கள் தெரு வாசிகளுக்கு எடுத்துக்கூறி ஒருவழி பாதை அமைய துணை புரிந்து மக்களுக்கு நன்மை புரிய அன்பாய் வேண்டுகிறேன் - செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்- சாதிக்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross