செய்தி: DCW ஆலை விரிவாக்கம் குறித்து தூ-டி.யில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்! ஆதரித்தும், எதிர்த்தும் காரசாரமாக கருத்துக்கள் பதிவு!! காயல்பட்டினத்தினர் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:DCW ஆலை விரிவாக்கம் குறித... posted byCnash (Makkah)[30 November 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13962
அஸ்ஸலாமு அலைக்கும்,
இதில் கலந்து கொண்டு நமது நிலைபாட்டையும் கருத்தையும் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி. மிக தெள்ள தெளிவாக தெரிகிறது, இந்த கருத்து கேட்கும் கூட்டம் (PUBLIC HEARANING) பொது மக்கள் நன்மைக்காக நடத்தப்பட்ட கூட்டம் அல்ல., மாறாக இந்த DCW இந்த விரிவாக்க பணிக்கு முன்அங்கீகாரம் கொடுக்கும் முயற்சி தான் என்பது அதை அங்கீகாரம் செய்ய ஒரு கூட்டமே வரிந்து கட்டி கொண்டு வந்து இருப்பதில் இருந்து தெரிகிறது.
எந்த ஒரு INDUSTRIAL EXPANSION PROJECT ஆகா இருந்தாலும் EC எனப்படும் ENVIRONMENT CLEARANCE ..அது சம்பந்த பட்ட சுற்றுசூழல் அமைச்சகத்திடம் (Ministry of Environment and Forests ) பெறபட்டால் தான் மற்ற நடவடிக்கைகளை தொடர முடியும், இந்த EC பெறுவதென்றால் கலெக்டர் முன்னிலையில், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் பிரதிநிதிகள், மற்றும் கலெக்டர் அவர்களால் தேர்வு செய்ய பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதி......
ஆனால் PUBLIC HEARING முன்னாடி குறிப்பிட்ட கால அவகாசத்தில் அந்த புதிய திட்டம் பற்றிய எல்ல தகவல்களையும் அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதும் விதி தான் இது எல்லாம் பின்பற்றபட்டதா என்பது தெரியவில்லை. எந்த முறையில் யாரெல்லாம் அழைக்கபட்டார்கள் என்று தெரியவில்லை . ஆனால் சம்பந்தம் இல்லாதவர்களில் தலைகள் தான் அதிகம் தென்படுகிறது. .
இந்த விரிவாக்கம் பற்றிய தகவல் அறிக்கை DCW நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்டு தற்போது நம் பார்வைக்காக தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.. கீழே உள்ள இணைப்பை அழுத்தி படித்து பார்க்கவும்
http://www.tnpcb.gov.in/pdf/Exe_sum_DCW_tam.pdf
அதில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் திட, திரவ கழிவுகள் வெளியேற்றும் முறை, சுத்திகரிக்கப்படும் முறை பற்றி எல்லாம் ஏட்டில் (?) அழகாக சொல்லிவிட்டு.. செயலில் கடலில் கலக்க விடபடுவடை கண்ணால் நாம் பார்க்கிறோம். .
அவர்கள் திட்டம் போட்டு நடத்துகிறார்கள்....இந்த கருத்துகேட்பு என்ற FORMALITY முடிந்து விட்டது...வேண்டும் என்று சொன்னோரில் கருத்தே மேலோங்கி நிற்கிறது. இனி NOC அப்புறம் SIA போன்ற secretriate level Approval தான் பாக்கி இனி அவர்கள் திட்டம் வெற்றி கரமாக நடத்தபடும் .
கலெக்டர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உண்மையான பாதிப்புள்ளாகி இருக்கும் நமதூர் போன்ற ஊரில் உள்ள மக்கள் குறிப்பிட்ட அளவில் அழைக்கபட்டதை போல தெரியவில்லை. பாதிப்பில்லாமல் பயனடையும் ஊரை சேர்த்தவர்கள் தான் அதிகம் அழைக்க பட்டு இருக்கிறார்கள் அவர்கள் குரலும் மேலோங்கி இருகிறது.. இடையில் அவர்கள் போடும் இரைக்கு அலையும் சில அரசியல் வாதிகள் மற்றும் துவேச அரசியல் நடத்தும் கட்சிகள். ஆகவே இந்த கருத்து கேட்டபின் முடிவும் எப்படி இருக்கும்!!!!
இனி நாம் என்ன செய்ய வேண்டும், CFFC இன் ரிப்போர்ட் மட்டும் அது சம்பந்தமான ஆய்வுகளை நாமே ஊரு சார்பாக தமிழ் நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கும், சுற்றுசூழல் அமைச்சகத்திற்கும் இந்த விரிவாக்க திட்டதை காரணமாக வைத்து அனுப்பலாமா. இது சம்பந்தமான நடவடிக்கையும், அறிவுரைகளையும் எதிர்பார்க்கிறோம். அதுத்த கட்ட நடவடிக்கைக்கு என்ன செய்ய வேண்டும். யாரை அணுகலாம்.!! தனி தனியாக நாமே Tamil nadu Polluttion Control Board க்கு E-mail or FAX மூலம் இது சம்பந்தமாக நமது கருத்தை அனுப்பி வைக்கலாமா?
அப்புறம் நமதூரில் அரசியல் கட்சிகள் என்று சில உள்ளதே அவர்கள் தான் ஊரையும் ஊர் மக்களையும் பாதுகாக்கிறோம் என்றுலாம் பேசிட்டு அலைந்தார்களே அவர்கள் கொஞ்சம் இப்போ ஊரு நலனுக்காக விழித்து எழுவார்களா..இல்லை election வந்தால் மட்டும் தான் வருவீர்களா ஊரை காக்க.. எது எதுக்குலாமோ தன் பணத்தை வரி இறைத்த வள்ளல்கள் இதற்காக கொஞ்சம் அக்கறை காட்டி தங்கள் அதிகாரத்தை இந்த நல்ல விஷயத்தில் காட்டுங்களே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross