3 'தி' . மதி நிதி நீதி posted byசாளை நவாஸ் (Singapore)[02 December 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 14022
தப்பாக நினைக்க வேண்டாம், ஆனால் இது தான் நிதர்சனமான உண்மை.
இந்த தலைப்பை பற்றி இன்னும் இரண்டு நாட்கள் விவாதிப்போம், அப்புறம் மறந்து விடுவோம். அப்புறம் "செங்கடல் நம் தலை எழுத்து " என்று ஒரு தலைப்பு வரும், காரசாரமாக விவாதிப்போம், அப்புறம் மறந்து விடுவோம்.
அவர்களுக்கும் இது தெரிந்து இருக்கும், ஆகவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அவர்கள் வேலையை ஜரூராக நடத்திகொண்டிருக்கின்றனர். படிப்பறிவில்லாத கிராமங்களில் கூட தொழிற்சாலைகள் கட்ட மறுப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற இந்த காலத்தில் நாம் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தோம்? ஏன் போராட்டங்கள் என்றாலே பின்னோக்கி ஓடுகிறோம்? நமக்கு என்ன வந்து விட்டது ஊரே ஒன்னும் கண்டுக்கமே இருக்கு என்ற ஒரே காரணத்தினால?
இவர்களை இதுவரை வளர விட்டதே நாம் தான் என்ற உண்மையை நாம் ஒத்து கொண்டுதான் ஆகவேண்டும்.
நடப்பவைகளை கவனத்தில் கொண்டு, இது ஒவ்வொரு காயலர்களின் உரிமை போராட்டம் என்ற மனோபாவம் ஒவ்வொரு இதயத்திலும் ஓடவேண்டும்.
போராட்ட குணம் வேண்டும். அடிக்க அடிக்க தான் அம்மியும் நகரும். ஒரு போராட்டத்தால் எந்த நன்மையையும் வந்தடையாது என்றாலும் கூட அந்த போராட்டமே நம் வெற்றிக்கு படிக்கலாக அமையும். போராடி பெற்றதுதான் சுதந்திரம்.
போராட்டம் ஒரு புறம் ஓடிகொண்டிருக்க, நீதி மன்றத்தின் படிகளை மிதிப்போம். அதற்குண்டான செலவு? யார் போவது? எங்கே போவது?
நமக்காக CFFC உருவாக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். பெரிய வெற்றி ஒன்று பெறாவிட்டாலும், மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி தொழிற்சாலையால் விடப்படும் எல்லா தீமைகளையும் ஆதாரபூர்வமாக பட்டியல் இட்டு பல காயல் நல மன்றங்கள் மூலம் அந்தந்த நாட்டு இந்திய தூதரகங்களில் கொடுத்து, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று எடுத்துரைத்தது வரை ஒருவகையில் வெற்றிதான்.
எல்லாவற்றுக்கும் தேவை 3 'தி' மதி நிதி நீதி.
நிதி அளிக்க விரும்புவோர் கிழே உள்ள லிங்கை சொடுக்கினால் விவரம் கிடைக்கும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross