செய்தி: 04ஆவது வார்டு உறுப்பினரின் குப்பை சேகரிக்கும் சுய திட்டம்! நகர்மன்றத் தலைவர் தலைமையில், ஐக்கியப் பேரவை தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விமர்சனங்களுக்கு ...நல்ல பல ஆலோசனைகளுக்கு நன்றிகள் கோடி உரித்தாகட்டும் !!! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[02 December 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 14046
அன்பார்ந்த காயல்.காம் வாசக நண்பர்களே.... ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் அனைவரையும் இங்கே மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... நாங்கள் செய்து கொண்டிருக்கிற சேவைகளை பாராட்டியும் அதே நேரத்தில் தேவையான நல்ல பல ஆலோசனைகளை எங்களுக்கு கூறியும் இருக்கிற நல்ல நெஞ்சங்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்க்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் .
இந்த குப்பை அள்ளும் விஷயமாக ஒரு சில சம்பவங்களை இங்கே சொல்ல கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டதால் வேறு வழியே இல்லை ...சொல்லியே தீரனும்....
கடந்த 5 நகராட்சி (25 வருடங்கள் ) நிர்வாக கால கட்டத்தில் எங்கள் பகுதி பின்புறம் உள்ள தனியார் நிலத்தில் கொட்டப்பட்டு வந்த குப்பைகளை அகற்றுவதற்கு யாருக்கும் தைரியமும் இல்லாமல் அதே நேரத்தில் நமக்கென்ன என்ற அலட்சிய போக்கும் மிகைத்து , அதனால் கிடைத்தது என்ன தெரியுமா அன்பர்களே.... கண்ணீர் மல்க சொல்கிறேன்... தீர்க்க முடியாத வியாதியும்... துயரமும்தான் அந்த பகுதியில்...!
கடைசியாக பிஞ்சு பாலகன் குளம் கபீர் ஹாஜியார் அவர்களின் அருமை பேரப்பிள்ளை அல்லாஹ்வை பிஞ்சு வயதில் சென்றடைந்ததுதான்...... நெஞ்சம் துடிக்கிறது.... தயவு செய்து, கருணை உள்ளம் படைத்தவர்களே... இந்த நேரத்தில் அந்த பகுதியை வந்து பாருங்கள்.... வுங்களுக்கும் புரியும் எங்கள் வேதனை...
சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.... எங்கள் சகோதரி ஹாஜரா அவர்கள் நகர சபையின் முதல் அமர்விலேயே இந்த குப்பை மலை பற்றி தான் பேசினார்கள்....
அதற்க்கு அங்கே குறுக்கிட்ட 3 வது வார்டு உறுப்பினர் இரட்டை குளத்து பள்ளி மற்றும் ஜலாலியா சங்கத்தார்களால் ஏக மனதாக நிறுத்தி வெற்றி பெற்ற சகோதரி சாராமா அவர்கள் அந்த நகர்மன்ற கூட்டத்திலேயே கடுமையாக குறுக்கிட்டு பேசியதோடு மட்டும் அல்லாமல் அவசியமே இல்லாமல் அந்த குப்பை மேட்டை நகர் மன்றம் துப்புரவு பண்ண கூடாது என்றும் தன் முழு எதிர்ப்பையும் அங்கே காட்டினார்கள்...
என்ன காரணம்? எங்கள் பகுதி மக்கள் இரட்டை குளத்து பள்ளி ஜமாஅத்தார்களுக்கோ அல்லது ஜலாலிய சங்க மக்களுக்கோ என்ன துரோகம் செய்தார்கள்? அல்லது... எங்கள் பகுதி உறுப்பினர் அவர்களுக்கு சேர வேண்டிய எந்த சலுகையை யாவது தட்டி பறித்தார்கள? அல்லது இடை மறித்து தான் அந்த பகுதி மக்களுக்கு துப்புரவு பணிகளை செய்யகூடாது என்றாவது தர்க்கம் செய்தார்களா?
அந்த அந்த பகுதி உறுப்பினர்கள் அவர்களின் பணிகளை பார்க்க வேண்டியது தானே? அது தானே நியாயம்? அதற்காக தானே மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து நகர சபைக்கு அனுப்பி இருக்கிறார்கள்....
அதை விடுத்து அவசியமே இல்லாம வேறு ஒரு வார்டு விவகாரத்தில் அனாவசியமாக தலை இட்டு எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை நாங்கள், எங்கள் வார்டு உறுப்பினர் மூலமாக உரிமையோடு நகர சபையின் தலைவி அவர்களிடத்தில் முறையிட்ட போது எந்த தலைமை பொறுப்பிலும் இல்லாத 3 வது வார்டு உறுப்பினர் அவர்கள் குறுக்கிட்டு பேச வேண்டியதன் மர்மம் தான் என்ன?
நியாயப்படி எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து அதை ஆமோதித்து போர்கால அடிப்படையில் செய்ய வேண்டிய செயல் என்று ஆதரித்து இருக்க வேண்டுமா வேண்டாமா? அதை ஏன் அன்று அவர்கள் செய்ய வில்லை? 5 வது வார்டு உறுப்பினர் ஜகாங்கீர் அவர்கள் மட்டும் அதற்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.
தலைவி அவர்களோ அல்லது துணை தலைவர் அவர்களோ எங்கள் பகுதி குப்பை மேட்டை துபபுறவு பண்ண கூடாது என்று குறுக்கு வாதம் பண்ணி பேச விடாமல் தடுத்த 3 ஆம் வார்டு உறுப்பினர் சாராமா அவர்களை கண்டிக்கவில்லையே......
அன்புககுரிய நண்பர்களே... தாய்மார்களே... அங்கே பரவக்கூடிய நோய் தொற்று நோய்... கொடிய நோய்... எங்களை மட்டும் தாக்கவில்லை... கூடிய சீக்கிரம் நம் நகரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக இருக்கிறது என்பதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக அறிந்துதான்.... யாருக்கோ வந்த விருந்து என்று நினைக்காமல்.... நகர சபை.. நகர சபை என்று ஆதரவு வைக்காமல்.... காலம் தாழ்த்தாமல்... இனியும் அங்கே குப்பை கொட்டப்படுமேயானால் இறப்பு எண்ணிக்கைதான் அதிகமாகும் என்பதை மனதில் கொண்டுதான் இந்த போர்கால அடிப்படையில் செய்யப்பட ஏற்பாடு என்பதை அனைவர்களும் புரிந்துக்கொள்ளுமாறு மிகவும் பணிவோடு உங்கள் கவனத்தில் பதிய வைக்கிறோம்....
நங்கள் சரித்திரத்தில் இடம் பெறவும் வேண்டாம்... எங்களுக்கு பேரும் புகழும் வேண்டாம்.... அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றே எங்கள் குறிக்கோள்! எங்கள் செயல் பாடுகளுக்கு இடைஞ்சல் தராமல் இருந்தாலே போதும்.... எங்கள் வலி எங்களுக்கு தான தெரியும்... எங்கள் பகுதி மக்களுக்குத்தான் புரியும்... நாங்கள் யாருக்கும் விரோதிகள் அல்லர்... எங்கள் பகுதி தூய்மை படுவதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையும் கிடையாது... அதை தடுத்தால் அதன் தீய பலன் அனைவருக்கும்தான் என்பதை மறந்து விடாதீர்கள் !
நகர சபை எங்களை முறையோடு அணுகுமேயானால் குப்பை அற்ற தூய்மையான காயல் நகரத்தை கூடிய விரைவில் உங்கள் அனைவரின் துஆவோடு செயல்படுத்தியும் காட்டுவோம்...... அனைவரும் எங்களோடு கை கோர்க்க... எங்களோடு தோளோடு தோள் கொடுக்க வாருங்கள் என்று உங்கள் அனைவரையும் இந்த நேரத்தில் அன்பு அழைப்பையும் விடுக்கிறோம் ....சிறு துளி பெரு வெள்ளம் !!!
தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.. சுட்டிக்காட்டுங்கள்.... திருத்திக்கொள்கிறோம்.... வாழ்த்திய.. விமர்சனம் செய்த அனைவருக்கும் எங்கள் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகள்...
(chennai exnora போன்ற நல்லதோர் தூய்மை படுத்தும் அமைப்பை உருவாக்கி.... அதன் மூலம் பயோ காஸ்... இயற்க்கை உரம் போன்ற நல்ல பல திட்டங்களை செயல் படுத்தவும் நம்மால் முடியும் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன் ).
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross