செய்தி: 04ஆவது வார்டு உறுப்பினரின் குப்பை சேகரிக்கும் சுய திட்டம்! நகர்மன்றத் தலைவர் தலைமையில், ஐக்கியப் பேரவை தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மீன் வேண்டாம் அதை பிடிக்ககற்றுத் தாருங்கள் posted bymusthak ahamed (mumbai)[03 December 2011] IP: 114.*.*.* India | Comment Reference Number: 14066
மதிப்பிற்குரிய கே.வி.ஏடி. அறக்கட்டளை நிறுவனத்திற்கு,
உங்கள் கடிதம் முழுதும் வழிந்தோடும் ஆதங்கமும் உங்கள் சுற்றுச்சூழல் குறித்த கவலையும் மிகவும் கவனத்திற்குறியதே.
மிகவும் ஆச்சர்யமான மனம் கணம் கொள்ளச்செய்யும் விசயம் கடந்த 25 வருடங்களாக -( கடந்த 5 நகராட்சி (25 வருடங்கள் ) நிர்வாக கால கட்டத்தில் எங்கள் பகுதி பின்புறம் உள்ள தனியார் நிலத்தில் கொட்டப்பட்டு வந்த குப்பைகளை அகற்றுவதற்கு யாருக்கும் தைரியமும் இல்லாமல் அதே நேரத்தில் நமக்கென்ன என்ற அலட்சிய போக்கும் மிகைத்து , அதனால் கிடைத்தது என்ன தெரியுமா அன்பர்களே.... கண்ணீர் மல்க சொல்கிறேன்... தீர்க்க முடியாத வியாதியும்... துயரமும்தான் அந்த பகுதியில்..copy and past -ref .no .14046 ) ஒரு சுகாதார மேம்பாடற்ற யாரும் தீர்க்காத ஒரு மரணம் கொண்ட இன்னும் உயிர்கள் கேட்கும் தலையாய பிரச்சினை.
இது வெறுமனே 04 - வது வார்டு விஷயம்..... மட்டுமல்ல.............. நகராட்சியின் அன்றாட கடமைகளில் அத்தியாவசியமான கடமையை முறைப்படி செய்யாமல் விட்டதன் பாவம்........... இதன் விலை ஒரு உயிர்...... பல நோய்கள்.......... நம்பிக்கைக்குரிய நகராட்சி தலைவர் அவர்களே என்ன நடக்கிறது.......... தங்களுடைய சேவையின் ஆரம்ப நிகழ்வாக இதில் அல்லவா கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.....
04 - வது வார்டு உறுப்பினர் அவர்களே நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்......... யாரோ ஓரிருவர் எதிர்த்தார்கள் என்பதற்காக எப்படி உங்கள் உரிமையை விட்டுக்கொடுத்தீர்கள்...............
சரி இவ்வளவு வேதனையான விசயம் .... உடனடியாக தவிர்க்க முடியாத போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம்........... சரி ஒரே ஒரே சந்தேகம்............. உங்களுக்கு கே.வி.ஏடி. அறக்கட்டளை என்ற பின்புலம் இல்லாமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்......... யாரோ எதிர்த்தார்கள் என்பதற்காக பேசாமல் இருந்து விடுவீர்களா......... இந்த விசயத்தில் நீங்கள் கே.வி.ஏடி. அறக்கட்டளையை நாடவேண்டும் என்பதே இல்லை. மக்களிடம் இந்த பிரச்சினையை கொண்டு போய் இருக்கவேண்டும். உயிர் கேட்கும் இந்த சுகாதார கேடான விசயத்திற்காக நகராட்சியை ஸ்தம்பித்து இருக்க செய்ய வேண்டும். அன்றே அனைத்து மக்களுடன் சேர்ந்து தெருவில் இறங்கி போராடி இருக்க வேண்டும்.
இப்போது உரிமையாய் பெறவேண்டியதை யாரிடமும் யாசகம் கேட்காமல் நகாராட்சியிடம் இருந்தே பெற்றிருக்க வேண்டும். இப்போது கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் கொடியசைத்துகொண்டும் சிரித்துக்கொண்டும் சுற்றி நிற்கும் அனைவர்களும் மக்களோடு சேர்ந்து அந்த குப்பை மேட்டை அகற்றி இருக்க வேண்டும்.
இப்போது நீங்கள் கண்டிருக்ககூடிய தீர்வு மோசமான எந்த விதத்திலும் தொடர் பலன் தராத தற்காலிகமான தீர்வு தான். மிகவும் கடினமான வார்த்தை பிரயோகம் செய்யவேண்டுமெனில் இது ஒருவிதமான கோழைத்தனம். ஆமாமாம்.... இப்படித்தான் நம் ஊர் சரித்திரம் இதனை பதிவு செய்யும்.
சபை தலைவர் அவர்களே........... கே.வி.ஏடி. அறக்கட்டளையின் வேண்டுகோள் உங்கள் காதுகளில் விழுகிறதா..........
(நகர சபை எங்களை முறையோடு அணுகுமேயானால் குப்பை அற்ற தூய்மையான காயல் நகரத்தை கூடிய விரைவில் உங்கள் அனைவரின் துஆவோடு செயல்படுத்தியும் காட்டுவோம்...... அனைவரும் எங்களோடு கை கோர்க்க... எங்களோடு தோளோடு தோள் கொடுக்க வாருங்கள் என்று உங்கள் அனைவரையும் இந்த நேரத்தில் அன்பு அழைப்பையும் விடுக்கிறோம் ....சிறு துளி பெரு வெள்ளம் !!! copy and past -ref .no .14046 )
உங்களால் எந்த அளவு இந்த நகராட்சியின் மூலம் அதிக பட்சமாக தீர்வு காண முடியும் என்பதை தெளிவு படுத்துங்கள். உடனடியாக செயலில் இறங்குங்கள்.
என்னுடைய ஆசையும் நீண்ட தீர்வும் என்னவெனில் நகராட்சி தலைவர் உடனடியாக தலையிட்டு நகராட்சி மூலமே இதற்கு தீர்வு காணவேண்டும். இப்போது வழங்கப்பட்டுள்ள வண்டிகளை நகராட்சி பெற்றுக்கொண்டு அவர்களின் நியாயமான தேவைகளை நீங்களே நிறைவேற்ற வேண்டும்.
முதலில் சுகாதரமான நகரை உருவாக்குங்கள்....................
கே.வி.ஏடி அறக்கட்டளை அங்கத்தினர்களே... உங்கள் மீதான என்னுடைய ஆதங்கமெல்லாம்........... இந்த விசயத்தில் நீங்கள் பணம் தருவதை விட இந்த விசயத்தை மக்கள் முன் கொண்டு சென்று போராடி நகராட்சியை இந்த பணிகள் செய்ய வைத்திருக்க வேண்டும் என்பதே....... அப்படி செய்திருந்தால் நிரந்தர தீர்வுக்கான விதை உங்களில் இருந்தே விதைக்கப்பட்டிருக்கும். இனியும் காலம் தாழ்ந்து விடவில்லை......
போராடுங்கள்........ பணத்தை விட பன்மடங்கு பலம் கொண்டது மனம்......... அதன் வலிமையை முறையாய் பயன்படுத்துங்கள். நம் சந்ததியினருக்காவது சுத்தமான சுகாதார காற்று சொந்தமாகட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross