செய்தி: வட்டாட்சியர் அலுவலகத்தில், கற்புடையார் பள்ளி வட்டம் சுனாமி குடியிருப்பு குறித்த சமாதானக் கூட்டம்! இரு தரப்பினரும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆட்சியாளர்களின் சூழ்ச்சியும், நமதூர் ஒற்றுமையும் posted bySaalai.Abdul Razzaq Lukman (Dubai)[03 December 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14083
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நமதூர் மக்களின் எண்ண உணர்வுகளை ஆணித்தரமாக பிரதிபலித்த தம்பி S.K.ஸாலிஹ்அவர்களுக்கு நன்றி.
"இவ்வழக்கு குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் கருத்தை அறிவதற்காக கடந்த 22.11.2011 அன்று நடைபெற்ற நகராட்சியின் சாதாரண கூட்டத்திற்குப் பின்னர், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வந்தனர். இவ்வழக்கை பதிவு செய்துள்ள நகர்மன்ற முன்னாள் தலைவரிடமிருந்து தேவையான விளக்கத்தைப் பெறாத நிலையில் எந்தக் கருத்து இதுகுறித்து தெரிவிக்க இயலாது என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் அங்கிருந்த உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்தனர்".Copy paste
சரியாக 10 நாட்கள் கழித்து ஏன் இந்த அவசர கூட்டத்தை, அதுவும் எந்த அவகாசமும் தராமல் அதே அதிகாரிகள் கூட்ட வேண்டும். இது அதிகாரிகளின் சூழ்ச்சி. அவர்களின் கணிப்பில், நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில், ஊர் இரண்டு பட்டுவிட்டது என்று நினைப்பு. இந்த நேரத்தில் கூட்டத்தை கூட்டினால், காயலர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கும்.அதை பயன்படுத்தி, தங்களது சதி / சூழ்ச்சியை நிறைவேற்றி விடலாம் என்ற எண்ணத்துடன்தான் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறார்கள்.
ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ், சூழ்ச்சிகாரர்களுக்கு எல்லாம் மகா சூழ்ச்சியாளன். நம்மிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி, தம்பி ஸாலிஹ் மூலம் சரியான பதிலை கொடுத்துள்ளான். தலைவி அவர்கள் என்ன கருத்தை தெரிவித்தார்கள் என்று இந்த news -இல் இல்லை. இதை வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
"பின்னர், இத்திட்டம் குறித்து காயல்பட்டினம் நகர பொதுமக்கள் தரப்பில் சென்றிருந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போதைய நகர்மன்றத் தலைவர் வழக்குப் பதிவு செய்தார் என்ற அடிப்படையில், இப்போதைய தலைவர் கைச்சான்றிட்டால், வழக்கை திரும்பப் பெற வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த கருத்தைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது". copy பேஸ்ட்
இது தான் அதிகாரவர்கத்தின் பிரித்தாளும் தந்திரம். இதற்கு எக்காரணம் கொண்டும் சம்மதிக்க கூடாது என்பது மட்டுமல்ல. மாறாக நகரமன்றத்தை அவசரமாக கூட்டி, சென்ற நகரமன்ற தலைவர், ஹாஜி செய்யத் அப்துல் ரஹ்மான் அவர்கள் தொடுத்த வழக்கை, தீர்மானம் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
இனி நடக்க வேண்டிய நடவடிக்கைகளை துரித படுத்த வேண்டும்.
ஐக்கிய பேரவை தலைமையில் மீண்டும் கூட்டம் போட்டு இந்த வழக்கை மேலும் strong பண்ண வேண்டும். அதிகாரிகள் கூட்டும் அடுத்த கூட்டத்திற்கு ஐக்கிய பேரவையை உள்ளடக்கிய அனைத்து ஜமாத்தினரும் திரளாக சென்று சட்டரீதியாக அந்த அதிகாரிகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும். எப்பாடு பட்டாவது அந்த சுனாமி குடியிருப்பை தடுத்து நிறுத்த வேண்டும். காயலர்கள், இளிச்சவாயன்கள் இல்லை, அவர்களை இனியும், எந்த விஷயத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த அதிகார வர்க்கம் உணர வேண்டும்.
மேலும் நமது கடற்கரையை அழகு படுத்துவது பற்றி நம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு), தெரிவித்த கருத்துக்கு, தம்பி ஸாலிஹ் அவர்களின் பதில் மிக சரியே. ஆனால் இந்த கருத்தை தலைவி அவர்கள் தெரிவித்து இருக்க வேண்டும். தலைவி அவர்கள் உடனே நம் நகராட்சியின் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி, ஆணையரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானமும், இனி வரும் காலங்களில் நமது கடற்கரையை அழகு படுத்த தேவையில்லை என்று இன்னொரு தீர்மானமும், ஒருமனதாக நிறைவேற்றி இந்த கருத்துகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.
ஓங்குக ஊர் ஒற்றுமை என்று பிரார்த்திக்கிறேன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross