Re:தமிழ் நாடு மெடிக்கல் கவுன... posted byT.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852)[04 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14107
அஸ்ஸலாமு அலைக்கும்!
எங்கள் பாசமிகு மற்ஹூம் அல்ஹாஜ் எஸ்.ஏ. மீராசாஹிப் ஹாஜியார் காக்கா,(எல்.கே.எஸ்.குடும்பம்,மற்றும் எல்.கே.எஸ். வர்த்தக குழுமம்) அவர்களின் (அல்லாஹும்மங்ஃபிற் லஹூ வற்ஹம்ஹு )சிரேஷ்ட்டப்புதல்வர் அல்ஹாஜ்.டக்டர் எம்.எஸ். அஷ்ரஃப் ஹாஜி அவர்களுக்கு கிடைத்த இந்த பொறுப்பு மிக சாமானியானது என்று கூற முடியாது. இவ்வளவு பொறுப்புக்களையும் அவருக்கு அல்லாஹ் தந்தமைக்கு நாம் எல்லோரும் ஸலாத்துஷ் ஷுக்ற் என்னும் இறை நன்றிதொழுகை இரண்டு ரக் அத் தொழுவோமாக.
இந்த ப்புகழ் அவருக்குமட்டுமல்ல, அவர்குடும்பத்துக்கும்,எங்கள் மகுதூம் பள்ளி மஹல்லா வுக்கும், காயல் நகர மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் புகழாரமாகு.ம். அல்ஹம்துலில்லாஹ்.
தனிப்பட்டமுறையில் கூறுவோமானால், மருத்துவ அனுகுமுறையிலும் ஒரு தனிப்பட்ட மிருதுவான தன்மை அவரிடம் இருக்கிறது. ஒருமுறை எனக்கு செய்த வைத்தியத்தில் பெரிய வேலைகளுக்கு சந்தர்ப்பம்கிடைத்த போதும்கூட, சக டாக்டர், மற்றும் தனது ஸீனியர் டாக்டரிடமும் அவரே மஷூறா செய்து அவ்வியாதியினை இல்லாமலாக்கிவிட்டது. இது எனக்கு மிகப்பெரிய உபகாரம்.நன்றி அல்ஹம்து லில்லாஹ்.
பத்து பதினைந்து வருடமாகியும் அந்த நோய் எனக்கு எட்டிப்பார்க்கவே இல்லை. அவ்வளவு பெருந்தன்மை அவரிடம் இருக்கிறது. அம்மாபெரும் தலைமைப் பதவி அவரைத்தேடி வந்தது என்றால் அது மிகை ஆகாது. இந்த மிருதுத் தன்மை அவரது தந்தையிடமும் இருந்தது என பல வருஷம் பழகிய எனக்கு அனுபவம் இருக்கிறது.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். திருக்குறள்.
(கற்றோர் நிறைந்த ) சபை களில் எல்லோரிலும் மேலாக இருக்க தகுந்த கல்வி உடையவனாக ஆக்குதல் தந்தை மகனுக்குச்
செய்யும் நன்மை யாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross