செய்தி: வட்டாட்சியர் அலுவலகத்தில், கற்புடையார் பள்ளி வட்டம் சுனாமி குடியிருப்பு குறித்த சமாதானக் கூட்டம்! இரு தரப்பினரும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தன்னிலை விளக்கம்! posted byS.K.Salih (Kayalpatnam)[04 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14119
அன்பர் வி.எஸ்.எம்.அலீ அவர்கள் தனது கருத்தில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவை,
(1) எஸ்.கே.ஸாலிஹ் தேர்தல் நேரத்தில் இருந்த நிலையிலிருந்து இப்போது மாறுபட்ட நிலைபாட்டில் உள்ளார்...
இதற்கு எனது விளக்கம்...
இத்தேர்தலில் எனக்கு 3 பரிமாணங்களில் தொடர்பு இருந்தது.
முதலாவது,
நான் ஒரு செய்தியாளன் என்ற அடிப்படையில் நகராட்சித் தேர்தல் குறித்த அனைத்து தரப்பு செய்திகளையும் வெளியிட்டது...
இரண்டாவது,
நான் சார்ந்திருக்கும் MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - MEGAவின் ஓர் அங்கமாக செயல்பட்டது...
மூன்றாவது,
ஆறாவது வார்டில் உறுப்பினர் பொறுப்பிற்கு நானும் போட்டியிட்டது...
இந்த மூன்றில் எந்த ஒன்றையும் மற்றொன்றுடன் நான் கலக்கவில்லை... அவ்வாறு விரும்பியதுமில்லை.
நிலைமை இப்படியிருக்க, இவர் என்ன குழப்பத்தை என்னிடம் கண்டுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை.
(2) நகர்மன்றத் தலைவர் ஆபிதா, தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்கச் சென்றபோது கற்புடையார் பள்ளி வட்டத்தைச் சார்ந்த கிறிஸ்துவ மீனவ சமுதாய மக்களிடம், சுனாமி தொகுப்பு வீடுகள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதாக வாக்களித்தார்...
இதற்கு நானறிந்த விளக்கம்:
அவ்வாறு வாக்களித்ததாக சிலர் இக்கருத்துப் பகுதியில் தெரிவித்தனர். நகர்மன்றப் பொறுப்பிற்குப் போட்டியிடும் ஒருவர் குறித்து வரும் செய்தி இது என்ற அடிப்படையில் சகோதரி ஆபிதா அவர்களிடம் இதுகுறித்து நானே விளக்கம் கேட்டபோது,
“நான் அப்படி எங்கும், யாரிடத்திலும் சொன்னதில்லை... அதற்கு அவசியமுமில்லை... நான் பிரச்சாரத்திற்காக சென்ற இடத்தில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தது உண்மை! அவர்களிடம், இது தொடர்பான இருதரப்பு விபரங்களையும் முழுமையாகப் பெற்ற பின்னர், நியாய அடிப்படையில் பாரபட்சமின்றி என் பொறுப்பிற்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்வேன் என்று மட்டுமே கூறினேன்...” என்று தெரிவித்தார்.
அதை நான் அச்செய்தியின் கருத்திலும் தெரிவித்திருந்தேன்.
அதன்பிறகும் அதுபோன்று அனுப்பப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உறுதி செய்யப்படாதவை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
இத்தனைக்குப் பிறகும், மீண்டும் மீண்டும் இவர் அதே கருத்தைச் சொல்வது ஆரோக்கியமற்றதாகவே தெரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross