Re:DCW தொழிற்சாலை உற்பத்தி வ... posted byUmar Rizwan Jamali (Singapore)[06 December 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 14184
ஊர் நலனில் அக்கறை கொண்ட, கொள்கிற அனைவருக்கும் மனப்பூர்வ பாராட்டுக்கள்.
இந்த DCW தொழிற்சாலையின் கழிவுகள்; அது காற்றிலும் கடலிலும் கலக்கப்படுவதால், நம் ஊர் மக்களுக்கு பல உயிர் கொல்லி நோய்களை இனாமாக வழங்குகிறது.
கடலில் கலப்பதை; அதன் இயற்கை நிற மாற்றத்தை கண்டவர் அறிவர்,
காற்றில் கலப்பதை; அந்த நச்சுக்காற்று கொன்றவர்களே மிக அறிவர்.
நமக்கு நோயை இனாமாக தருவதற்காக நம் ஊர் திசை நோக்கி காற்று வீசும்போது அத்தொழிற்சாலையிலிருந்து கழிவை புகையாக வெளியேற்றுவது, அவர்கள் நம் மக்களின் மீது கொண்ட ஆழமான (உயிர் கொல்லி) நட்பின் வெளிப்பாடு.
அதற்கு நாம் கொடுக்கும் பரிசு; நம் மழலைகள் முதல் ... மறை ஏந்தும் மகத்துவமான அதிகாலை பொழுதில், அகமும் புறமும் மாசு நிறைந்த பகுதியை நோக்கி அச்சமர அனுப்பி அசத்துகிறோம்.
சென்று வா மகனே சென்று வா. உன் சப்தம் உலகெங்கும் ஒலிக்கட்டும் என்று எத்திசையை நோக்கி கையசைத்து நாம் அனுப்புகிறோமோ, அதிசயிலிருந்து பெறப்படும் ஆரோக்யமற்ற கழிவு, நித்தம் நித்தம் எத்தனை நம் சகோதர சப்தங்களை மண்ணுக்கடியில் முடக்கியது.
ஊர் மக்கள் ஒட்டு மொத்தமாக ஒட்டுமொத்த வழிகளிலும் எதிர்ப்பை தெரிவித்து அதில் வெற்றி கிடைத்தால்;
இவ்வுலகில் நாமும் நலமுடன் வாழ்ந்து, பிறரும் வாழ வழி செய்த புண்ணியம்.
அவ்வெற்றி எட்டாக்கனியாக போனால்; பிறர் துன்பத்தை துடைக்க முயற்சித்த பாக்கியமாவது மறுமையில் மிஞ்சும்.
நாம் விசுவாசிகள்; நமக்கிடையில் ஒருவருக்கொருவர் உறுதுணை புரிவது நம்மீது கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம், வெற்றி பெறுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross