செய்தி: 04ஆவது வார்டு உறுப்பினரின் குப்பை சேகரிக்கும் சுய திட்டம்! நகர்மன்றத் தலைவர் தலைமையில், ஐக்கியப் பேரவை தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இரட்டை குளத்து பள்ளி மற்றும் ஜலாலியா சங்க கண்ணியத்துக்குரிய பெரியவர்கள் என்றும் என் மரியாதைக்குரியவர்களே!! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[06 December 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 14214
அன்பான காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எனது தன்னிலை விளக்கத்தில், 03ஆவது வார்டு உறுப்பினரின் செய்கை குறித்து விவரிக்கையில், ஜலாலிய்யா சங்கம், இரட்டை குளத்துப் பள்ளியையும் இணைத்து கருத்து வெளியிட்டிருந்தேன்...
உண்மையில் நான் சொல்ல வந்தது...
“உறுப்பினர் சாரா உம்மாள் அவர்களை இரட்டை குளத்துப் பள்ளி ஜமாஅத், ஜலாலிய்யா சங்கம் ஆகிய இருபெரும் சக்திகள் இணைந்து ஆதரித்ததன் அடிப்படையிலேயே அவர் உறுப்பினராகியுள்ளார்... நானும் நெய்னார் தெருவைச் சார்ந்தவன்... அந்த ஜமாஅத்தில் ஓர் அங்கம்...
அப்படியிருக்க, 04ஆவது வார்டு உறுப்பினர் முத்து ஹாஜரா முன்வைத்த குப்பை மேட்டை அகற்றும் திட்டத்தை இவர் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறாரே...? அவரைத் தேர்ந்தெடுத்த இரட்டை குளத்துப் பள்ளி, ஜலாலிய்யாவைச் சார்ந்த யாராவது ஒருவராவது அவரது இந்த நிலைபாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பார்களா...? செய்யமாட்டார்கள்! அவ்வாறிருக்க, இவர் இப்படி எதிர்க்க வேண்டிய அவசியமென்ன?”
இதுதான் உண்மையிலேயே என் எண்ணத்தில் உதயமானது. ஆனால், எனது முந்தைய கருத்தைப் பார்க்கும் அனைவரும் அதை தவறாக எடுத்துக்கொள்ளும் வகையில் அதன் வாசகம் அமைந்துவிட்டமைக்காக வருந்துகிறேன்...
இதனை உரிமையுடன் எனக்கு (இந்த கருத்துப் பகுதியைத் தவிர்த்து) கண்ணியமான முறையில் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் சுட்டிக்காட்டிய அன்புத்தம்பியும், என் பாசத்திற்குரிய மர்ஹூம் பாடகர் ஸாலிஹ் மச்சானின் மகனாருமான மவ்லவி ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் மஹ்ழரி ஃபாழில் ஜமாலி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள், ஜஸாக்குமுல்லாஹு கைரா...
என்றும் கண்ணியத்தை பேண விரும்பும் சகோதரன்,
K.V.A.T. ஹபீப் முஹம்மத்
தோஹா, கத்தார்
kvat.habib@gmail.com
00974 55657147
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross