Re:காயல்பட்டின குடிநீர் விநி... posted byCnash (Makkah )[10 December 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14348
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த புரியாத புதிர் ஒன்று இருக்கிறது என்பதை கூட என்போன்ற எண்ணற்றவர்களுக்கு இந்த செய்தியின் மூலம் புரிய வைத்த அட்மின் அவர்களுக்கு பாராட்டுக்கள்!! இந்த ரிப்போர்ட்இன் மூலம் பல மறைந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தததற்கு நன்றிகள்!! இந்த கார்ப்ரேட் உலகத்தில் கல்வி அறிவும், ஆற்றலும் காசாக மாறிக்கொண்டு இருக்கும் யுகத்தில் எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லாமல், ஊரின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு உங்கள் உழைப்பையும் ஆற்றலையும் இது போன்ற பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு வல்ல அல்லாஹ் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் தருவான். ..இடையில் நூறு விமர்சனங்கள் பழிசொற்கள்!!!
நகராட்சியின் அவல நிலையை நினைத்து பார்த்தால் ஆச்சர்யமாகவும் அதே சமயம் ஆத்திரமாகவும் வருகிறது. இத்தனை வருடங்கள் நாம் பணம் கொடுத்து பெறும் தண்ணீரை கூட அளந்து பார்க்க ஒரு நிர்வாகம் இல்லை.. நொண்டி சாக்குகள் ஆயிரம்... தங்கள் வீட்டு பொருளை அப்படி வாங்குவார்களா!!
பைபாஸ் ரோட்டில் உள்ள இடத்தில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.. அனுப்பும் தண்ணீர் சரியாக அனுப்ப படுகிறது (அவர்களின் அளவு படி). ஆனால் பெறப்படும் தண்ணீருக்கு கணக்கு இல்லை.. அதை சரி செய்ய எந்த முயற்சியும் இல்லை.. ஆனால் கட்டும் தொகையோ தினமும் 9000 வீதம் வருடத்திற்கு 35 லட்சம்.. (Rs.32.85 லட்சம்தான் கணக்கு வருது.. இதில் ஏதும் கோல்மால் இல்லையே....??)
முந்தைய நிர்வாகத்தில் அலட்சிய போக்குதான் இதற்கு காரணம், இந்த அலட்சியத்தால்தான் நம் பணம் வீணடிக்க படுகிறது.
இது வெறும் குறை சொல்லுவதற்காக இல்லை, மாறாக முந்தைய சீர்கேட்டில் இருந்து இன்றைய நிர்வாகம் பாடம் படிக்க வேண்டும் அந்த தவற்றை திருத்தி கொண்டு துணிவுடன் நடவடிக்கை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வந்து நம் பணமும் உரிமையும் வீணாக கூடாது என்பதற்காகத்தான்!!
இதற்கிடையில் அமைந்துள்ள DCW தொழிற்சாலை, சமீபத்தில் தனது விரிவாக்க பணிக்காக வெளியிட்ட ENVIRONMENTAL IMPACT ASSESSMENT REPORT இல் அதன் தினசரி தண்ணீர் பயன்பாடு தற்போதுள்ள நிலையில் (உற்பத்திக்கு மட்டும்) 6944 CUBIC மீட்டர் அதாவது 6 ,944 ,000 லிட்டர் (SIX MILLION NINE HUNDRED FORTY FOUR THOUSAND) என்றும், அது விரிவாக்க பணிக்கு பிறகு தண்ணீரில் பயன்பாடு 11 ,822 CUBIC METER அதாவது 11,822,000 லிட்டர் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது..
ஆனால் இதற்கான SOURCE வெறுமனே தாமிரபரணி ஆறு என்றுதான் காட்டபட்டிர்கிறது!! அப்படி என்றால் அது எந்த முறையில் பெறப்டுகிறது என்பதை RTI மூலம் அறிந்து கொள்ள வேண்டிய கடமை நம் தற்போதைய நகராட்சிக்கு உண்டு!! அதன் மூலம் நம் தண்ணீரும் உரிமையும் கொள்ளை போகிறதா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் நகராட்சி இருக்கிறது..
இதை தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்போ செய்வதை விட நகராட்சி மூலம் அணுகுவதில்தான் கூடுதல் பலம் உள்ளது. அதற்கான நடவடிக்கை இந்த புதிய நகராட்சி துவக்குங்கள் , மக்கள் அனைவரும் முன்னின்று ஆதரவளிக்கிறோம்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross