Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )[11 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14377
மலரும் நினைவுகள்..
பள்ளியில் படிக்கும் காலத்தில்,இன்ஸ்பெக்டர் வர்றார், இன்ஸ்பெக்டர் வர்றார் என்று ஒரு வாரமாக மாலையில் உடற்பயிற்சி என்று ஒன், டூ, திரீ போட்டு கையை காலை தூக்கி, இன்ஸ்பெக்டர் வந்த அன்று அவருக்கு பம்மாத்து காட்டிவிட்டு, உடற்பயிற்ச்சிக்கு ஒரு குட் பை...இன்ஸ்பெக்டர் அவர்களுக்கும் ஒரு பெரிய குட் பை. இது தான் பள்ளிகளில் உள்ள உடற்பயிற்சி உடைய நிலைமை.
நன்கு படிக்கும் மாணவர்களை முதல் பெஞ்சில் வைத்தால், இன்ஸ்பெக்டர் கடைசி பெஞ்சு மாணவனிடம் கேள்வி கேட்பார், கடைசியில் நல்ல மாணவர்களை உட்கார வைத்தால், முதல் பெஞ்சு மக்கு மாணவருக்கு கேள்வி போகும்.
ஆக, ஒருமுறை எங்கள் ஆசிரியர் நன்கு படிக்கும் மாணவர்களை முதல் மற்றும் கடைசி பெஞ்சுகளில் உட்கார வைத்தார்.
வந்த அதிகாரி நடுவில் இருந்த மாணவனை கேள்வி தொடுக்க (அந்த மாணவனின் இடுப்பில் கை வைத்தால் உடனே பூனா, சூனா என்று திட்டி விடக்கூடியவன்), பின் இருக்கையில் இருந்த நண்பன் ஒருவன் "உன்னிடம் தான் ஐயா கேள்வி கேட்கிறார்கள்" என்று அவன் இடுப்பில் தவறாக கைவைத்து அவனை எழுப்ப.... இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு அருமையான பதில் கிடைக்க, அவர் திகைக்க, அனைவர்களும் சிரிக்க, பிரச்சனை பெரியதாக ஆக, அனைவர்களும் ஹெட் மாஸ்டர் அறைக்கு வெளியில் வெயிலில் காய, நிலைமையை ஐயாவிற்கு புரியவைத்து கூல் பண்ண...எல்லாம் சுகமான நினைவுகள்.
அன்று தான் எங்களுக்கு " எள்ளு எண்ணெய்க்கு காய்கிறது, எலிப்புளுக்கை ஏன் காய்கிறது" என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரிந்தது.
நாங்கள் எல்லாம் தப்பு செய்து (சிரித்தது), HM ரூமுக்கு வெளியில் வெயிலில் பல மணி நேரம் காத்து இருந்தோம், எங்கள் வகுப்பு ஆசிரியர் ஏன் எங்களுடன் வெயிலில் வாடினார்..
** மற்ற ஆசிரியர்களுக்கு சந்தோசம்...ஏன் என்றால் எங்கள் பஞ்சாயத்தை தீர்க்கவே பொழுது சாய்ந்து விட்டது, அப்புறம் எங்கே இன்ஸ்பெக்டர் மத்த வகுப்பறைகளுக்கு செல்ல **
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross