DCW posted byIBN SAHIB (Dammam)[06 December 2010] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1438
1999 என்று நினைக்கிறேன். நம் நகர திமுக பிரமுகர் DCWவின் மாசுபடிந்த நீரை ஒரு பாட்டிலில் தந்து, திமுகவில் இருக்கின்ற காரணத்தினால் என்னால் DCWக்கு எதிராக போராட முடியாது, எனவே முன்னோடி முஸ்லிம் இயக்க நிர்வாகிகளிடம் சொல்லி போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்குமாறு சொன்னார். நானும் என் நண்பரும், முஸ்லிம்களின் முன்னோடி கழகத்தின் பொதுச் செயலாலரை சென்னையில் சந்தித்து அந்த மாசு படிந்த நீரை அடையாரில் இருக்கும் KINGS LABOURATORYயில் பரிசோதனை செய்த பிறகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், அரசின் கவனத்தை ஈர்க்கும் ஜனநாயக போராட்ங்களை மேற்கொள்ளுமாறும் வேண்டிணோம்.
நிச்சயமாக அதற்கு ஆவண செய்கிறேன் என்று வாக்களித்தார். பிறகு அந்த இயக்கத்தின் காயல் நகர நிர்வாகிகளிடம் விசாரிக்குமாறு பொறுப்பளிக்கப்பட்டது. ஆனால் அன்று இருந்த அந்த இயக்க நிர்வாகிகள், DCWவிடம் 5 லட்சம் தரவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்று பேரம் பேச, DCWவின் அதிகாரி நமதூர் முக்கியஸ்தர் மூலம் சென்னையில் உள்ள இயக்க தலைமையை நாடினார்கள். இதில் உண்மை இருப்பதை அறிந்த தலைமை, நமதூரின் ஊழல் நிர்வாகத்தை கூண்டோடு கலைத்து, பேரம் பேசியவர்களை அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்தும் வெளியேற்றினார்கள். இது நான் அறிந்த ஒரு சம்பவம். இப்படி எந்த அரசியல்வாதிகலெல்லாம் DCWவிடம் பேரம் பேசினார்களோ?! அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
எனவே DCWவின் ஊரு விளைவிக்கும் நச்சு காற்றைப்பற்றி நமதூரை சேர்ந்த பலர் அறிந்தே வைத்துள்ளார்கள். ஆனால் காயல்பட்டணம்.காம் இன்று மக்களிடம் எடுத்து செல்லும் அளவிற்கு கொண்டு செல்லவில்லை என்பதே உண்மை. எனவே காயல் ஐக்கிய பேரவை, காயல்பட்டணம்.காம் நிர்வாகிகளிடம் மேலதிக விபரங்களை பெற்று DCWவின் நச்சு தன்மைமிக்க ரசாயன கழிவுகளினால் ஏற்படும் தீங்குகளுக்கு தீர்வு காண வேண்டுகிறேன்.
[Administrator: Dear Mr.Ibn Sahib, kindly provide your full name - while posting]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross