| |
செய்தி எண் (ID #) 5195 | | | திங்கள், டிசம்பர் 6, 2010 | DCW: பாகம் 6 - காயல்பட்டண கடலில் இறக்கும் மீன்கள்: பிரன்ட்லைன் செய்தி! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 5049 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய | |
பிரன்ட்லைன் (Frontline) என்பது தி ஹிந்து குழுமத்தின் மாதமிருமுறை (Fortnightly) வெளிவரும் பத்திரிக்கை ஆகும். அதில் 1995 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி இதழில் Exploitative Economy: Environment and Pollution Concerns என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அக்கட்டுரையினை எழுதியவர் ஆஷா கிருஷ்ணகுமார். இவர் பத்திரிக்கை துறையில் சமூக சிந்தனை கொண்டு செய்திகளை வெளியிட்டதற்காக பல விருதுகளை பெற்றவர்.
அவரின் 1995 ஆம் ஆண்டு கட்டுரை தமிழகத்தில் எவ்வர்று தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுப்புற சூழல்கள் சீரளிக்கபடுகின்றன என்பதை விளக்கியது. அக்கட்டுரையினை முழுமையாக படிக்க இங்கு அழுத்தவும்.
காயல்பட்டணம் குறித்து அக்கட்டுரை கூறியதாவது:-
மாநிலத்தில் 12,000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அதில் சுமார் 5000 கடலோரமாக உள்ளது. மேலும் 2500 கடலுக்கு மிக அருகில் உள்ளது. சென்னையை சுற்றியே மிக அதிகமாக - 1500 - தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகள் (பல) கடலுக்கு கழிவாக Cadmium , Copper, Lead, Mercury, Nickel மற்றும் zinc போன்ற கன உலோகங்களை விடுகின்றன. மீன்களும், பிற கடல் வளங்களும் இக்கரைகளில் மடிவது ஆச்சரியத்திற்கு உரியது அல்ல. உதாரணத்திற்கு தூத்துக்குடிக்கு தெற்கே உள்ள காயல்பட்டணம் 1980களில் இருந்து (கடலில்) மீன்கள் இறப்பதை கண்டுவருகிறது.
கரையோரம் 3 கிலோ மீட்டர் வரை நீளும் நீரோடைகள் (Lagoons) வருடம் முழுவதும் மூடப்பட்டு இருந்தாலும், வருடத்தில் 1 அல்லது 2 தினங்கள் மட்டும் - அதிலிருந்து மாசுப்பட்ட கழிவு நீர் கடலுக்கு செல்ல திறந்துவிடப்படுகிறது. ஆயிரக்கணக்கில் மீன்களையும், பிற கடல் வளங்களையும் கொல்ல அதுவே போதுமானதாக உள்ளது. Organic Compounds, Chlorinated Hydrocarbons மற்றும் Mercury போன்ற பொருட்களை கடலில் கலக்கும் - காயல்பட்டணம் அருகே சாஹுபுரத்தில் உள்ள இரண்டு பெரிய - தொழிற்சாலைகளே மிக பெரிய மாசு உற்பத்தியாளர்கள்.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|