இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் கடைப்பிடிப்பதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரியில் 10 ஆயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள னர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள் ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலைய நுழைவு வாயில்களில் வின்டோ மெட்டல் டிடெக்டர் கருவி மூலம், பயணிகள் உடை மைகள் சோதனையிடப்படுகின்றன.
மேலும் ரயில்வே பாது காப்பு படையினர் 50 பேர் தண்டவாளங்கள், ரயில்வே பாலங்கள், ரயில்வே பார்சல் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய்கள் மூலம் ரயில்பெட்டிகள் மற் றும் பயணிகளின் உட மைகள் சோதனையிடப்படுகிறது. பயணிகளின் நடமாட்டத்தை ரகசிய கேமிரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
நெல்லை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில் பாலங்கள் மற்றும் சாலை பாலங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மணிமுத்தாறு 12வது பட்டாலியனில் இருந்து ஒரு கம்பெனி போலீசார் ரயில், பஸ் நிலையம், கோயில்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பெண் பயணிகளிடம் 25 பெண் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லைக்கு வந்து செல்லும் 46 ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், மார்க்கெட் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை எஸ்.பி.,ஆஸ்ராகர்க், தூத்துக்குடி எஸ்.பி. கபில்குமார் சரத்கர், குமரி எஸ்.பி. ராஜேந்திரன் மற் றும் நெல்லை மாநகர துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் தலைமையில் 10ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உளவு துறை போலீசாரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமாக திரிந்த 14 பேரை போலீசார் பிடித்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
கூடன்குளம் அணுமின் நிலையம், விஜயநாராய ணம் கடற்படை தளம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகிய பகுதிகளில் மத்திய பாது காப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளிலும் தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
தகவல்:
தினகரன் |