| |
செய்தி எண் (ID #) 5185 | | | சனி, டிசம்பர் 4, 2010 | DCW: பாகம் 4 - ஐந்து மாதங்களுக்கு மூடப்பட்ட DCW தொழிற்சாலை! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3448 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய | |
மத்திய அரசாங்கத்தின் சுற்றுப்புறசூழல் துறை விதிகளின்படி - தொழிற்சாலைகள் மூன்று விதமாக பிரிக்கப்படுகின்றன. மிக அதிகமாக மாசு
உண்டாக்கும் தொழிற்சாலைகள் சிகப்பு வகை (Red Industry) என்றும், மிதமாக மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகள் ஆரஞ்சு வகை (Orange
Industry) என்றும், குறிப்பிடும் படியாக மாசு உண்டாக்காத தொழிற்சாலைகள் பச்சை வகை (Green Industry) என்றும் பாகுப்படுத்தபடுகின்றன.
DCW மேற்கொள்ளும் இரசாயன பொருள் உற்பத்தி Chloro-Alkali வகை தொழில் ஆகும். இது Red Industry பிரிவை சார்ந்தது.
தமிழ் நாடு மாசு
கட்டுப்பாடு வாரியம் ஒவ்வொரு வகைக்கும் தனியே விதிமுறைகள் வைத்துள்ளது.
உதாரணமாக சிவப்பு வகை தொழிற்சாலைகளை - பெரியது, நடுத்தரம் மற்றும் சிறியது - என மூன்றாக பிரித்து, பெரிய சிவப்பு தொழிற்சாலைகள்
மாதமொருமுறை என்ற கணக்கிலும், நடுத்தர சிவப்பு தொழிற்சாலைகள் - இருமாதத்திற்கு ஒருமுறை என்ற கணக்கிலும், சிறு சிவப்பு
தொழிற்சாலைகள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என்ற கணக்கிலும் - மாசு கட்டுப்பாடு வாரிய களப் பணியாளர்களால் (Field
Officers) கண்காணிக்கப்பட வேண்டும் என்பது விதி. DCW பெரிய சிவப்பு வகை தொழிற்சாலை ஆகும்.
காயல்பட்டணத்தை பொறுத்தவரை இரு வகையான மாசுகளை கண்கூடாக சந்தித்துள்ளது. அவ்வப்போது நகரை சூழ்ந்த காற்று மண்டலம் மற்றும் அவ்வப்போது நிறம் மாறிய கடல். அச்சம்பவங்கள் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் செய்தியாகவும் வெளியாகி உள்ளன.
பிப்ரவரி 22, 2001 இல் வெளியான காயல்பட்டணமே புகைமண்டலமாக காட்சியளித்தது என்ற செய்தி :-
ஜனவரி 1, 2009 இல் வெளியான காயல்பட்டணத்தில் செங்கடல்! என்ற செய்தி :-
இது போன்று சம்பவங்களுக்கு காரணகர்த்தா DCW தொழிற்சாலை என்று நகரில் பெரும்பாலானோர் உறுதியாகி கூறுகின்றனர். வேறு சில தகவல்களும் அதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக உள்ளன.
DCW தொழிலாளர்கள் பிரச்சனை என்ற செய்தி பலமுறை பத்திரிக்கைகளில் வெளி வந்திருந்தாலும், DCW மாசு குறித்த செய்திகள் மிகவும் அரிது. அவ்வாறு அரிதான ஒரு செய்திதான் 1996 ஆம் ஆண்டு DCW உடைய Ilmenite தொழிற்சாலை ஐந்து மாதங்களுக்கு மூடப்பட்ட விஷயம்.
தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவின் பெயரில் சாஹுபுரத்தில் இயங்கும் DCW உடைய Beneficiated Ilmenite தொழிற்சாலை ஆகஸ்ட் 1996 முதல் ஜனவரி 1997 வரை - ஐந்து மாதங்களுக்கு மூடப்பட்டது.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|