மேலவை தேர்தலுக்கான பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (5ம் தேதி) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களில் மனு அளிக்கலாம்.
தமிழக சட்ட மேலவை 78 உறுப்பினர்களை உள்ளடக்கியது. இதில் 26 மேல வை உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் மூலமும், 26 பேர் உள்ளாட்சி பிரதிநிதி கள் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர்கள் தொகுதி, தமிழ்நாடு பட்டதாரிகள் தொகுதியில் இருந்து தலா 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். 12 உறுப்பினர்கள் தமிழக கவர்னர் மூலம் நியமனம் செய்யப்படுவர்.
மேலவைத் தேர்தலுக் காக தமிழகத்தில் தலா 7 பட்டதாரிகள் தொகுதியும், ஆசிரியர்கள் தொகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 22ம் தேதி வரைவு வாக் காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் சேர்க்கும் பணியும் நடந்து வருகிறது. வருகிற 7ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாகும்.
இதற்காக விடுமுறை நாளான இன்று (5ம் தேதி) வாக்காளர் பெயர் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
பட்டதாரிகள் தொகுதிக்கு படிவம் 18 மூலமும், ஆசிரியர்கள் தொகு திக்கு படிவம் 19 மூலமும் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் தொகுதிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன், குடியிருப்பு ஆதாரச் சான்று, பட்டதாரி என்பதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது பட்டப்படிப்பிற்கான அசல் சான்றை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காண்பித்து சரி பார்த்த பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். பட்டதாரிகள் 1.11.2007க்கு முன்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு சான்றை தாசில்தார்கள், பிடிஒக்கள், நகராட்சி கமிஷனர்கள், அரசு கல்லூரி முதல்வர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிட மும் ஒப்புதல் பெற்று விண்ணப்பிக்கலாம். மொத்தமாக விண்ணப்பங்கள் பெறப்படாது. அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களில் வாக் காளர் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம்.
தகவல்:
தினகரன் |