| |
செய்தி எண் (ID #) 5197 | | | திங்கள், டிசம்பர் 6, 2010 | DCW: பாகம் 7 - 23 வகை கடல் உயிரினங்கள் மாசு நீரினால் பாதிக்கப்பட்டன: CMFRI ஆய்வறிக்கை! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 5756 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய | |
பாகம் 6 இல் நாம் கண்ட பிரன்ட்லைன் செய்தியில் காயல்பட்டணம் பற்றி சில குறிப்புகள் இருந்தது. அதற்கான மூலத்தை அச்செய்தி தெரிவிக்காவிட்டாலும், அநேகமாக அது 1991 ஆம் ஆண்டு வெளிவந்த Central Marine Fisheries Research Institute (CMFRI) உடைய ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டே இருந்திருக்கவேண்டும்.
Fish mortality due to pollution by industrial effluents in inshore waters of Kayalpatnam என்ற தலைப்பில் 1991 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் வெளியான அவ்வறிக்கை ஹெச். முஹம்மது காசிம், டி.எஸ். பாலசுப்ரமணியன், எஸ்.ராஜபாக்கியம் மற்றும் வீ.எஸ்.ரெங்கசாமி ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் எழுதபட்டிருந்தது. CMFRI - கேரளா மாநிலம், கொச்சியை தலைமையாக கொண்டு செயல்படும் மத்திய அரசாங்கத்தின் நிறுவனம் ஆகும்.
அவ்வறிக்கையின் சாராம்சம் இங்கே தமிழில் வழங்கப்படுகிறது. முழு அறிக்கையை ஆங்கிலத்தில் காண இங்கு அழுத்தவும்.
மாசு காரணமாக மீன்களும், பிற கடல் வளங்களும் காயல்பட்டணம் மற்றும் அதன் சுற்றுபுரங்களில் இறந்து கிடப்பதை காணமுடிந்தது. மாசுக்கான முக்கிய காரணம் காயல்பட்டணத்திற்கு அருகில் சாஹுபுரத்தில் உள்ள DCW மற்றும் Plastic Resins and Chemicals Limited என்ற நிறுவனங்கள் . நவம்பர் 2, 1989 அன்று காயல்பட்டணம் மற்றும் திருச்செந்தூர் கடல் ஓரமாக - 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை மீன்கள் இறந்து கிடந்தன.
1982 - 1987 காலகட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் பல முறை நடந்துள்ளது. வழக்கமாக இது நவம்பர் மாதம் நடக்கும். 1983 மற்றும் 1986 ஆண்டுகளில் இது டிசம்பர் மாதம் நடந்தது. 1985 ஆம் ஆண்டு இது பிப்ரவரி மாதம் நடந்தது.
இச்சம்பவங்கள் மாசு கலந்த நதிக்கிளை (Creek) மழைக்கு பின் திறந்து விடபட்ட பிறகே நடக்கிறது. (மீன்கள்) இறப்புகளுக்கு அந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் அமிலம் கலந்த கழிவே காரணம். DCW - Caustic Soda, Liquid Chlorine, Hydrochloric Acid, Trichloroethylene, Polychloroethylene, Beneficiated Ilmenite மற்றும் Vinyl Chloride Monomer போன்ற இரசாயனங்கள் தயாரிக்கும் மிக பெரிய நிறுவனம் ஆகும். Mercury மற்றும் பிற அமிலங்கள் - முதலில் நதிகிளைக்கும், பின்னர் கடலுக்கும் அனுப்பபடுகின்றன.
DCW க்கு அருகிலேயே Plastic Resins and Chemicals Ltd (PRC) என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு PVC Resin, Benzene, Tar மற்றும் Waste Aromatics தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து வரும் மாசுகள் Chlorinated Hydrocarbons, Carbon போன்றவை.
PRC உடைய கழிவு, DCW உடைய கழிவுடன் சேர்ந்து இறுதியாக கடலில் போய் சேருகிறது.
நதிக்கிளையின் நீளம் - கடலில் சேருவதற்கு முன்னர் - 2 கிலோ மீட்டர் ஆகும். நதிக்கிளையின் வாய் மூடப்பட்டே இருக்கும். வடகிழக்கு பருவ மழை காலத்தில் மட்டும் கழிவு நீர் கடலுக்கு திறந்து விடப்படுகிறது. கடலில் சேரும்போது மாசுபட்ட தண்ணீர் மஞ்சள்-பழுப்பு (Yellowish-Brown) நிறமாக இருக்கும். அந்நேரத்தில் கடலில் இருக்கும் ஓட்டம் அதனை தெற்கு நோக்கி இழுத்து செல்லும். திடீரென கடலுக்கு கழிவு நீர் விடப்படுவதே மீன்கள் மற்றும் பிற கடல் வளங்களும் மொத்தமாக இறப்பதற்கு காரணம். இது ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டும் நடக்கும். அடுத்த சில நாட்களில் தொடர் மழையினால் வரும் நல்ல நீர் - மாசு தன்மையை குறைத்து (dilute) விடுகிறது.
நாங்கள் எங்கள் மீன்வள ஆராய்ச்சி வேலைக்காக நவம்பர் 20, 1989 அன்று காயல்பட்டணம் சென்றோம். அவ்வேளையில் கடலில் இறந்த மீன்கள் பல நதிகிளையில் இருந்து திருச்செந்தூர் வரை காணமுடிந்தது. DCW நதிகிளைக்கு அருகில் மிக அதிகமாகவும், திருசெந்தூரில் மிக குறைவாகவும் காணப்பட்டது. இறந்த மீன்களை எடுத்து கணக்கிட்டோம். 23 வகை கடல் உயிரினங்கள் மாசு நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இறப்புக்கான தெளிவான காரணங்களை அறிய நாலு இடங்களில் தண்ணீர் மாதிரி (Sample) சேகரிக்கப்பட்டது. நீரில் - வெப்பம், கரைந்த உயிர்வாய்வு (Dissolved Oxygen), Salinity, pH மற்றும் Mercury ஆகியவை சோதிக்கப்பட்டது. வெப்பம், கரைந்த உயிர்வாய்வு (Dissolved Oxygen) மற்றும் Salinity ஆகியவை சராசரி அளவே இருந்தன. pH ஆபத்தான அளவு இருந்தது. மீன்கள் மற்றும் கடல் வளங்கள் இறப்புக்கு காரணம் நீரில் இருந்த அதிக நச்சு மாசு ஆகும்.
இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட Plastic Resins and Chemicals Ltd தனி நிறுவனம் அல்ல. அதுவும் DCW உடைய ஒரு அங்கமாகும். இப்போது அது DCW உடன் இணைக்கப்பட்டு அதன் PVC பிரிவாக செயல்படுகிறது.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|