முஹர்ரம் மாத அமாவாசை டிசம்பர் 5 ஞாயிறு அன்று - இங்கிலாந்து நேரப்படி மாலை 5:37 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய
நேரம் இரவு 11:07 மணி. அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மறையும் நேரம் 5:57, சந்திரன் மறையும் நேரம் 5:38. சூரியன் மறையும்போது
அமாவாசை நிகழ்ந்திருக்காது. உலகில் எங்கும் பிறை அன்று தென்படாது.
டிசம்பர் 6 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:58 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:36. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 19 மணி நேரம். சூரியன் மறைந்து 38 நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைந்தாலும் - வெறுங்கண்களுக்கு எளிதாக புலப்படாது.
தொலைநோக்கிகள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காணலாம்.
டிசம்பர் 6 அன்று தென் அமெரிக்காவிலும், அலாஸ்கா மற்றும் வட கனடா தவிர்த்து வட அமெரிக்காவிலும், ஆப்ரிக்காவின் வட பகுதிகள் தவிர பிற
இடங்களிலும் பிறை தென்படும். தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு அரேபிய தீபகற்பம், தென் இந்திய மற்றும் இந்தோனேசியாவின் மேற்கு
பகுதிகளில் பிறையை காணலாம்.
டிசம்பர் 7 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:58 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:32. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 43 மணி நேரம். சூரியன் மறைந்து 94 நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைகிறது. வெறுங்கண்ணுக்கு எளிதாக தெரியும். உலகின்
அனைத்து பகுதகளிலும் பிறையை எளிதாக பார்க்கலாம்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு டிசம்பர் 5 (அமாவாசை) அன்று துல்ஹஜ் 29
பூர்த்தி ஆகிறது. அன்று உலகில் எங்கும் பிறை கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லாததால் டிசம்பர் 6 அன்று அவர்கள் துல்ஹஜ் 30 பூர்த்தி செய்வர்.
டிசம்பர் 7 - அவர்களுக்கு முஹர்ரம் 1 ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு (ஒரு சாரார்க்கு) டிசம்பர் 5 (அமாவாசை) அன்று துல்ஹஜ் 28 முடிந்திருக்கும். டிசம்பர் 6 அன்று தமிழகத்தில் தொலைநோக்கிகள் கொண்டு மட்டும் பிறை தெரிய வாய்ப்புள்ளது. ஆகவே அவர்கள் டிசம்பர் 6 அன்று துல்ஹஜ் 29 பூர்த்தி செய்து, டிசம்பர் 7 அன்று துல்ஹஜ் 30 அவர்கள் பூர்த்திசெய்வர். ஆகவே அவர்களுக்கு டிசம்பர் 8 அன்று முஹர்ரம் 1 ஆகும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தினருக்கு டிசம்பர் 5 (அமாவாசை) அன்று துல்ஹஜ் 27 முடிந்திருக்கும். டிசம்பர் 6 அன்று மேலே கூறியது
போல் தமிழகத்தில் தொலைநோக்கிகள் கொண்டு மட்டும் பிறை தெரிய வாய்ப்புள்ளது. டிசம்பர் 6 அன்று துல்ஹஜ் 28 அவர்கள் முடிப்பர். டிசம்பர் 7 அன்று அவர்களுக்கு துல்ஹஜ் 29
முடிந்திருக்கும். அன்று தமிழக வானில் 1.5 மணி நேரம் - 43 மணி நேர வயதடைந்த பிறை இருக்கும். பிறை எளிதாக தெரியும். ஆகவே அவர்களுக்கும் டிசம்பர் 8 அன்று
முஹர்ரம் 1 ஆகும்.
இருப்பினும் தற்போதைய வானிலை சூழல் தொடர்ந்தால் டிசம்பர் 7 மாலை பிறை தமிழகத்தில் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தினர் டிசம்பர் 8 அன்று துல்ஹஜ் 30 பூர்த்தி செய்வர். அவர்களுக்கு டிசம்பர் 9 அன்று முஹர்ரம் 1 ஆகும்.
தகவல்:
www.kayalsky.com
|