Acetyl Salicylic Acid - மாத்திரை வடிவில், Aspirin என்ற பெயரில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தலைவலி,
உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு மருத்துவர்கள் Aspirin மாத்திரையை பரிந்துரைப்பது உண்டு. Aspirin - இருதய நோய் மற்றும் பக்கவாதம்
(Stroke) போன்றவைகள் வரும் வாய்ப்பை குறைக்கும் என ஆராய்ச்சிகள் முன்னரே தெரிவித்துள்ளன.
Lancet மருத்துவ
பத்திரிக்கை - Aspirin எடுப்பது பல பொதுவான புற்று நோய்கள் வரும் வாய்ப்பையும் பல மடங்கு குறைக்கும் என அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட்
பல்கலைக்கழகம் உட்பட பல நிறுவனங்கள் - இங்கிலாந்தில் 25,000 நோயாளிகளை கொண்டு நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த
முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்முடிவுகள் நேற்று வெளியாயின.
தினமும் ஒரு முறை 75 மில்லி கிராம் அளவுக்கு Aspirin எடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் Calcium சேர்த்து எடுப்பது நல்லது என்றும், பாலையும் சேர்த்துக்கொண்டால் வைற்று எரிச்சல் குறையும் என்றும் மேலும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாத்திரை எடுப்பதை 45 - 50 வயதிலிருந்து துவக்கலாம் என்றும், 25 ஆண்டுகளுக்கு தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
குடல் புற்ற நோய் [Bowel Cancer] (40 சதவீத அளவுக்கு) , நுரையீரல் புற்று நோய் [Lung Cancer] (30 சதவீத அளவுக்கு), Prostate புற்று நோய் (10 சதவீத அளவுக்கு) , Oesophagus புற்று நோய் (60 சதவீத அளவுக்கு) Aspirin மூலம் குறைந்துள்ளதாக அவ்வாய்வு தெரிவிக்கிறது.
Pancreas புற்று நோய், வைற்று புற்று நோய் (Stomach Cancer) மற்றும் மூளை புற்று நோய் (Brain Cancer) குறித்து முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை என்றும், ஆராய்ச்சியில் பெண் நோயாளிகள் குறைவாக இருந்ததால் மார்பு [Breast Cancer] மற்றும் க௫ப்பை புற்றுநோய் [Ovarian Cancer] குறித்தும் முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை என மேலும் அவ்வாய்வு தெரிவிக்கிறது.
Aspirin மாத்திரையின் தெரிந்த பக்க விளைவு வைற்றிலிருந்து ரத்தம் வருவதாகும். அதிலுள்ள நன்மையை கருத்தில் கொண்டு அதனை பெரிதாக எடுக்காமல் இருக்கலாம் என்றும் சில மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Aspirin மாத்திரையை எடுக்கும் முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து கொள்வது நல்லது. |