| |
செய்தி எண் (ID #) 5184 | | | சனி, டிசம்பர் 4, 2010 | DCW: பாகம் 3 - அசுர, பல முனை வளர்ச்சி! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3341 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
1959 ஆம் ஆண்டு சாகுபுரத்தில் துவக்கப்படும் போது Caustic Soda மட்டும் தயாரிக்கப்படும் நிறுவனமாக DCW இருந்தது. 1965 - 1970 க்கு
இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மட்டும் DCW - நான்கு புது தொழிற்சாலைகளை சாகுபுரத்தில் நிறுவியது.
அவைகளில் மூன்று தொழிற்சாலைகள் (Upgraded Ilmenite தவிர்த்து) - Caustic Soda தயாரிக்கும் போது அதனோடு தயாராகும் Chlorine யை
அடிப்படையாக கொண்டு நிறுவப்பட்டவை. 1965 ஆம் ஆண்டு Liquid Chlorine தொழிற்சாலையும், 1968 ஆம் ஆண்டு (நாட்டின் முதல்)
Trichloro Ethylene தொழிற்சாலையும், 1970 ஆம் ஆண்டு PVC Resin மற்றும் Upgraded Ilmenite தொழிற்சாலையும் துவக்கப்பட்டது.
தற்போதும் DCW - இத்தாலி நிறுவனம் ஒன்றுடனும், பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுடனும் - புது தொழிற்சாலைகளை துவக்குவதற்கான திட்டங்களை
அறிவித்துள்ளது.
DCW - தனது வரவு மற்றும் இலாபத்தை மூன்று தலையாக பிரித்து காட்டுகிறது. குஜராத்திலிருந்து செயல்படும் Soda Ash ஒரு பிரிவாகவும், சாகுபுர
தொழிற்சாலைகள் Caustic Soda மற்றும் PVC பிரிவு என்று இரு பிரிவாகவும் பிரித்து
காண்பிக்கப்படுகிறது. 2009-2010 ஆம் ஆண்டு முடிவில்
Soda Ash பிரிவு மூலம் 176 கோடி ரூபாய் வரவும், 23 கோடி ரூபாய் இலாபமும், Caustic Soda பிரிவு மூலம் 423 கோடி ரூபாய் வரவும், 54
கோடி ரூபாய் இலாபமும், PVC பிரிவு மூலம் 419 கோடி ருபாய் வரவும், 39 கோடி இலாபமும் DCW பெற்றது.
அதிகம் மின்சாரம் தேவைப்படும் வர்த்தகமான Chlro-Alkali தொழிலில் தற்போது DCW - அதற்கு தேவைப்படும் மின்சாரத்தை தானே தயாரிக்கும்
முகமாக Captive Power Plant (2 * 25 MW) நிறுவிவுள்ளது. அதிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் DCW - மின்சாரம் விற்று வருமானம்
ஈட்டி உள்ளது.
ஆரம்பத்தில் PVC பிரிவு தனி நிறுவனமாக (Plastic Resins and Chemicals Ltd) இருந்தது. பின்னர் DCW நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. இப்போதும் DCW Pigments Ltd. என்ற பெயரில் தனி நிறுவனம் DCW - கட்டுபாட்டின் கீழ் இயங்குகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் DCW Home Products நிறுவனத்தின் கீழ் Captain Cook என்ற பெயரில் உப்பு மற்றும் மாவு விற்கப்பட்டது. பிறகு உப்பு தொழில் மட்டும் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டது.
இது தவிர DCW Estates Pvt Ltd (DEPL) மற்றும் Crescent Finstock Pvt Ltd (CFPL) என பல நிறுவனங்கள் DCW குழுமத்தினரால் நடத்தப்படுகிறது.
DCW நிறுவனத்தில் இப்போது சுமார் 3000 பேர் (குஜராத் தொழிற்சாலையும் சேர்த்து) வேலை செய்கிறார்கள். செய்திதாள்களில் DCW பெயர்
தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து அவ்வப்போது அடிப்பட்டுள்ளது. DCW தொழிற்சாலையில் தொழிலாளிகள் பிரச்னை 1970 ஆம் ஆண்டு தமிழக
சட்டசபையிலும் பேசப்பட்டது.
சமீபத்தில் - 2006 ஆம் ஆண்டு சாகுபுரத்தில் DCW தொழிற்சாலை ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 19 வரை - தொழிலாளர் பிரச்னை காரணமாக மூடப்பட்டது.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|