தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில், மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ எஸ்.அப்துல்ரகுமான் தலைமையில் நடந்தது. இதயதுல்லா, சிக்கந்தர், சாதிக் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு கவிக்கோ அப்துல்ரகுமான் கூறியதாவது:
தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா மதரஸா நிர்வாகமும் இணைந்து, மயிலாடுதுறை நீடூரில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் முஸ்லிம் சமுதாயத்துக்காக மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இந்த கல்லூரி லாப நோக்கில் செயல்படாது. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ.60 கோடி தேவை. இந்த பணத்தை மருத்துவக் கல்லூரியும், பொதுக்குழு உறுப்பினராக விரும்புபவர்களும் ஜமாத், தொழிலதிபர்கள் ஆகியோர் ரூ.10 லட்சம் வீதம் நன்கொடை வழங்கலாம். நன்கொடை வழங்கும் குடும்பத்தாரின் வாரிசுதாரர் ஒருவருக்கு மெடிக்கல் சீட் வழங்கப்படும். ரூ.1 கோடி தருபவர்களின் பெயர்கள் மருத்துவக் கல்லூரி வகுப்பறைகளுக்கும், சாலைகளுக்கும் சூட்டப்படும்.
மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு விட்டது. அதற்கு முன்பு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்படும். முறைப்படி அனுமதி பெற்று, 2012ம் ஆண்டு கல்லூரி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தகவல்:
தினகரன் |