ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், அவ்வமைப்பின் சார்பில் வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள சிறப்பு மலருக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 30.11.2010 அன்று இரவு 08.30 மணிக்கு, இ.டி.ஏ. ஜீனத் கலந்தாலோசனைக் கூடத்தில் நடைபெற்றது. மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தலைமை தாங்கினார். செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கடந்த 26.11.2010 அன்று துபை அல்ஸஃபா பூங்காவில் மன்றத்தால் நடத்தப்பட்ட உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் வரவு – செலவு கணக்குகள் இக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
அத்துடன், இனி வருங்காலங்களில் இன்னும் சிறப்புற இக்கூட்டங்களை நடத்திடும் பொருட்டு, நடைபெற்று முடிந்த கூட்டத்தின் நிறை-குறைகள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டு, புதிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டது.
மன்றத்தால் விரைவில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ள சிறப்பு மலருக்கான ஏற்பாட்டுக் கூழுவிற்கு உறுப்பினர்கள் வரவேற்கப்படுவதாக காயல்பட்டினம்.காம் வலைதளம் மூலமும், மன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட உறுப்பினர்களின் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு, இக்கூட்டத்தில் பின்வருமாறு மலர்க்குழு நியமிக்கப்பட்டது:-
ஆலோசனைக் குழு:
ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ (குழு தலைவர்)
ஹாஜி துணி உமர்
ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் (ஒப்புதல் பெறப்பட வேண்டும்)
ஏற்பாட்டுக் குழு:
சாளை ஷேக் ஸலீம் (ஒருங்கிணைப்பாளர்)
கவிமகன் காதர் (துணை ஒருங்கிணைப்பாளர்)
மக்பூல் அஹ்மத் (அபூதபீ)
எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் (சி.லெ.) (அபூதபீ)
எம்.ஏ.முஹம்மத் ஈஸா
கே.வி.மொகுதூம் முஹம்மத்
டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன்
பாஸுல் ஹமீத்
எம்.எம்.ஆஸாத்
ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ (அபூதபீ)
ஏ.எம்.அஹ்மத் நிஜாம்
அப்துல் லத்தீஃப்
எஸ்.கே.ஸாலிஹ் (காயல்பட்டினம்)
இறையருளால் வெளியிடப்படவுள்ள இச்சிறப்பு மலர் குறித்த அவ்வப்போதைய அறிவிப்புகளை இனி மலர்க்குழுவே வெளியிடுவதென முடிவு செய்யப்பட்டது. நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மலர்க்குழுவினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத்தலைவர்,
அமீரக காயல் நல மன்றம்.
படங்கள்:
பாஸுல் ஹமீத்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |