DCW மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை அதன் சாகுபுர வளாகத்தில் துவக்குகிறது. Arkema என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவுள்ளது.
இப்புது தொழிற்சாலை ஆண்டுக்கு 10,000 டன் CPVC Resin என்ற பொருளையும், 12,000 டன் CPVC Compound என்ற பொருளையும் உற்பத்தி செய்யும். இப்பொருள்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் DCW ஆகும். இப்புது தொழிற்சாலை இரண்டு ஆண்டுகளில் தயாராகும்.
இந்த தகவலை நேற்று மாலை DCW நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு தெரிவித்தது.
ஆண்டுக்கு 31,000 டன் Synthetic Iron Oxide உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் இத்தாலி நாட்டு நிறுவனம் Rockwood Italia உடன் சமீபத்தில் கையெழுத்தானது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
2. நமது நகராட்சி posted byN.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[03 December 2010] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1380
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இப்பொழுது பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம், இரண்டு மாதத்துக்கு முன்பு இத்தாலி நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகியதாக செய்தி வந்தது.
D C W நிறுவனம் நமது நகராட்சி எல்கைக்குட்பட்டதுதானே! இப்படி அவர்கள் வியாபாரம் பெருகுவதனால் நமது நகராட்சிக்கு ஏதும் அதிகப்படியான வரிகள் கிடைக்கிறதா?.
இல்லையெனில் அதிக வரிகள் வசூலிப்பதற்கான திட்டங்கள் வகுத்து வசூலிக்கலாமே?.
நகராட்சி நிர்வாகம் முயற்சிக்குமா???.
அடுத்து இந்த மாதிரி கெமிக்கல்ஸ் தொழிற்சாலை உள்ள இடங்களில் எல்லாம் மிக,மிக அதிகமான
மரங்களை வளர்ப்பார்கள் காரணம் காற்றில் வரக்கூடிய நச்சுகிரிமியை எல்லாம் அந்த மரங்கள் இழுத்துக்கொள்ளும் என்பதற்காக.
அதனால் நமது நகராட்சி, D C W நிறுவனத்திடம் அதிகமான மரங்களை, நமது சுற்று
வட்டாரங்களில் அமைத்திட வற்புறுத்தலாமே.
அதன் மூலம் ஏற்படும் கொடிய நோய் வராமல்
தடுக்கலாமே. நகராட்சி நிர்வாகம் வற்புறுத்துமா???.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross