காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
புற்று நோய் உட்பட பல நோய்கள் வருவதற்கான காரணங்களில் அதிகம் நாம் கவனம் செலுத்தாத விஷயம் நாம் உண்ணும் பொருட்களில்/ உணவு
தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கலப்படம்.
BIS (பாதுகாப்புகான சான்றிதழ்) முத்திரை பெறாத எண்ணைகள், பிற உணவு தயாரிக்கும் பொருட்கள் நகரில் பல கடைகளில் விற்பனைக்கு
உள்ளன. வாங்குபவரும் அதனை கவனிப்பது இல்லை, சுகாதார அதிகாரிகளும் அதனை கண்டுகொள்வதில்லை.
பலசர கடைகளில் உணவு தயாரிக்கும் பொருட்களை வாங்குபவர்கள் - விலை சற்று அதிகமாக இருந்தாலும், அறிந்த, நல்ல நிறுவனங்களின்
பொருட்களை வாங்குவதே சிறந்தது.
மேலும் சமீபமாக ஓட்டல்களில் உணவு வாங்கும் பழக்கம் நகரில் அதிகரித்துள்ளது. ஓட்டல்களில் பயன்படுத்தும் பொருட்களின் தரம், சுகாதாரம்
கேள்விக்குரியதே. அவைகளையும் கண்காணிப்பது மிக அவசியமாகும்.
மேலும் கவனத்திற்கு உரியது நகரில் உள்ள இனிப்பு கடைகள் மற்றும் அங்கு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்.
சுருங்கச் சொன்னால் தரத்தை பற்றி சந்தேகம் இருந்தால் அதனை பயன்படுத்தாமல் இருப்பதே புத்திசாலிதனமாகும்.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|