தருமபுரி மாவட்டத்தில் உள்ள மனித வள மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம் அண்மையில் மாநில அளவிலான ஓவிய போட்டி ஒன்று நடத்தியது.
அப்போட்டுகளில் தமிழகம் முழுவதிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காயல்பட்டணம் எல்.கே. மெட்ரிகுலேசன் பள்ளி சார்பாக இப்போட்டிகளில் கலந்து கொண்ட எல்.கே.ஜி. வகுப்பு மாணவர் எஸ்.ஹெச்.முஹம்மது ஆதிப் மபாதிர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றார். அவருக்கு பரிசாக தங்க பதக்கமும், பாராட்டு சான்றிதழும், ரொக்கம் ரூபாய் 250 -ம் பரிசாக வழங்கப்பட்டது.
தகவல்: ஆர்.மீனா சேகர்,
தலைமை ஆசிரியை, எல்.கே. மெட்ரிகுலேசன் பள்ளி.
3. கவனம் செலுத்துவது நல்லது posted byN.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia)[05 December 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1420
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு வாழ்த்துக்கள்.
உற்சாகமாக, தைரியமாக போட்டியிலே கலந்து கொண்டு பரிசுகளை வாங்கியதற்காக
அந்த சிறு மாணவரை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
அதற்கு ஊக்கம் அளித்த ஆசிரியர்களுக்கும்,
பெற்றோர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
மேலும் எல்லா மாணவர்களையும் படிப்பிலும், விளையாட்டிலும் மற்றும் பொதுத்தொண்டு செய்வதிலும்
ஊக்கப்படுத்தும்படி ஆசிரியர்களையும் மற்றும் பெற்றோர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
-------------------------------------------
முக்கிய குறிப்பு : -
ஓவியப்போட்டி என்றால் எப்படியான ஓவியப்போட்டி?.
உருவம் வரைவதா? அல்லது இயற்கை காட்சிகள்தானா ?.
மார்க்கத்துக்கு விரோதமான போட்டியானால் அது வேண்டாமே!
சிறுவர்கள்தானே! என்றிருந்திட வேண்டாம்!!.
நாளை அவர்கள்தானே பெரியவர்களாவார்கள்!!!.
பெற்றோர்கள் இது விசயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross