தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை சீர்படுத்தும் ஆணையம் (TELECOM REGULATORY AUTHORITY OF INDIA - TRAI) இன்று விளம்பர அழைப்புகள்,
எஸ்எம்எஸ்கள் குறித்த புதிய ஆணையை பிறப்பித்தது. Unsolicited Commercial Communications Regulations, 2010 என்ற அந்த ஆணை
வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
2007 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட Telecom Unsolicited Commercial Communications Regulations, 2007 என்ற ஆணையின் தொடர்ச்சியே
இந்த புதிய ஆணை. 2007 ஆம் ஆண்டு ஆணை - DO NOT CALL REGISTRY என்ற வசதியை தொலைபேசி சந்தாதாரர்க்கு ஏற்படுத்தி கொடுத்தது.
அதன்படி விளம்பர அழைப்புகள் பெற விரும்பாதவர்கள் தங்கள் எண்ணை 1909 என்ற சிறப்பு எண்ணுக்கு எஸ்எம்எஸ்.ஆக அனுப்பியோ (START DND
/ STOP DND) அல்லது அழைத்தோ பதிவுசெய்துகொள்ளலாம்.
அவ்வாறு பதிவு செய்துகொண்ட 45 நாட்கள் கழித்து பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு எந்த விளம்பர அழைப்போ, எஸ்.எம்.எஸ். தகவலோ வராது. இது
சட்டம். பதிவையும் மீறி விளம்பர நிறுவனங்கள் அழைத்தால் அந்நிறுவனங்கள் மீது - புகார் பதிவின் அடிப்படையில் - நடவடிக்கை எடுக்கப்படும்.
நடைமுறையில் இந்த சட்டத்திற்கு பின்னும் பதிவு செய்த பலருக்கு விளம்பர அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. அதனை கருத்தில் கொண்டு
TRAI இன்று இந்த புதிய ஆணையை பிறப்பித்துள்ளது.
இதன்படி ஏற்கனவே DO NOT CALL REGISTRY யில் பதிவுசெய்துள்ளவர்கள் தொடர்ந்து அந்த பட்டியலில் இருப்பார்கள். உங்கள் எண் அந்த
பட்டியலில் உள்ளதா என பார்க்க இங்கு அழுத்தவும்.
புதியதாக TRAI - சில சேவை தகவலுக்காக மட்டும் அழையுங்கள் (DO CALL) என்ற வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. சேவைகளை 7
வகையாக பிரித்துள்ளது:-
(1) Banking/Insurance/Financial products/credit cards
(2) Real Estate
(3) Education
(4) Health
(5) Consumer goods and automobiles
(6) Communication/Broadcasting/Entertainment/IT
(7) Tourism and Leisure
சந்தாதாரர்கள் தாங்கள் விரும்பும் சேவையை தேர்வுசெய்து அது குறித்த விளம்பரங்களை மட்டும் பெறலாம்.
சந்தாதாரர் தன் எண்ணை சேர்த்தோ/விலக்கியோ செய்யும் பதிவு செயல்படுவதற்கான காலம் 45 நாட்களில் இருந்து 7 நாட்களாகவும்
குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் விளம்பர அழைப்புகள் செய்யும் நிறுவனங்கள் கண்டிப்பாக TRAI -உடன் பதிவு செய்திருக்கவேண்டும். அவர்களுக்கு 70 என்று துவங்கும் எண்
வழங்கப்படும்.
விளம்பர அழைப்பு வேண்டாம் என பதிவு செய்யாத சந்தாதாரரும் - இந்த எண்ணை கொண்டு (70 என்று துவங்குவதன் மூலம்) யாரிடும் இருந்து அழைப்பு வருகிறது என்று தெரிந்து
கொள்ளலாம்.
இதுதவிர இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை எந்த விளம்பர அழைப்புகளும் செய்யப்பட கூடாது.
DO NOT CALL REGISTRY இல் பதிவு செய்யாதவர்கள் அனைவரும் DO CALL பட்டியலில் உள்ளதாக கருதப்படுவர் என்பதை கவனத்தில்
கொள்ளவும்.
இப்புதிய ஆணையில் - விளம்பர அழைப்புகளிலிருந்து தங்களை விலக்கிகொண்ட எண்களுக்கு, அழைப்பு செய்யும் விளம்பர நிறுவனங்களுக்கு அபராதமும், தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
|