காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
புற்று நோய் உட்பட பல நோய்கள் நம்மை தாக்குவதற்கு நமது அறியாமையும் ஒரு காரணம் என்றாலும் (உதாரணமாக நல்ல உணவு என்ன, கெட்ட
உணவு என்ன என அறியாமல் இருத்தல்) - நாம் அறிந்தே புற்று நோயை விலைக்கு வாங்குவது சிகரட் மற்றும் புகை பழக்கத்தினால்.
புகையிலை பொருட்களின் மீதான வரியினை கூட்டுதல், புகைப்பட எச்சரிக்கைகள், விளம்பரங்களுக்கு தடை, பொது இடங்களில் புகைப்பதுக்கு
தடை போன்ற சட்டங்களை அரசு நிறைவேற்றினாலும் - புகைப்பவரின் எண்ணிக்கை இந்தியாவை பொருத்தமட்டில் விரைவாக குறையும் அறிகுறி
எதுவும் இல்லை.
இது குறித்து சமுதாயமும் சில நடவடிக்கைகள் மேற்கொள்வது இச்சூழலில் கட்டாயமாகிறது. சிகரட் புகைக்கு காயல்பட்டணத்தில் முதலில் அடிமை
ஆகிறவர்கள் பொதுவாக தங்கள் பயணத்தை துவக்குவது சங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் தான். துவக்கிய பயணம் - நகரில்
இருக்கும் போது - தொடர்வதும் அதே இடங்களில் தான்.
எவ்வாறு புகைபிடிப்பவரை இல்லங்களில் அவரது பெற்றோரோ அல்லது துணைவியோ கண்காணித்து அறிவுறுத்த வேண்டுமோ, அதுபோல் பொது
நல சங்கங்ககளும், விளையாட்டு அரங்குகளும் - வளாகத்திற்குள் - புகைபிடிப்பதை கண்டிப்பாக தடை செய்யவேண்டும். புகைப்பதினால்
புகைப்பவரை தவிர்த்து, அருகில் இருப்பவரும் பாதிக்கபடுகிறார் என்ற சிந்தனையை புகைப்பவருக்கு ஏற்படுத்த வேண்டும்.
அதுமட்டும் அன்றி சிகரட் போன்ற புகையிலை பொருட்களை பள்ளிவாசல்களுக்கு உரிமையான சொத்துகளில் விற்க அனுமதிக்காமல் தடை செய்யலாம். தங்கள் இடங்களை கடைகளுக்கு வாடகைக்கு கொடுப்பவர்களும் இது போன்ற நிபந்தனையை விதிக்கலாம்.
இச்செயல்களின் குறிக்கோள் - புகைபிடிப்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல என்பதை அதற்கு அடிமையானவர்களுக்கு உணர்த்துவதே ஆகும்.அதன் மூலம் இளைய சந்ததியனர்க்கும் - இப்பழக்கத்தை துவக்கும் முன்னரே, புகைபிடிப்பது சமுதாயத்தால் வெறுக்கப்பட்ட செயல் என்பதை உணரவைக்க முடியும்.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|