தமிழகத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் குறித்து திமுக, அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்பது கட்சிகளின் பிரதநிதிகளுடன் தேர்தல் ஆணையத்தின் துணைச் செயலாளர் ஜே.பி.பிரகாஷ், சட்ட ஆலோசகர் மென்ட்டிரட்டா ஆகியோர் தனித்தனியே நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தில் நடந்தது.
பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்றும், இதன்மூலம் கள்ள ஓட்டைத் தடுக்க முடியும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஓட்டு வாங்க பணம் வினியோகத்தை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஓட்டு எந்திரத்தில் யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கு சான்று அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
தகவல்:
www.thatstamil.in
|