வீர, தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும், முதலமைச்சர் மூலமாக குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூபாய்
25,000/- க்கான காசோலை, பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீரச் செயல் புரிந்து, உயிர் மற்றும் உடமைகளைக்
காத்த, தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுள்ளவர்கள். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில்
மூவருக்கும் (காவல் மற்றும் தீயணைப்பு துறை நீங்கலாக) பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.
2011 ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள்
(APPLICATIONS) வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக செயலாளர்,
பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை - 600 009 அவர்களுக்கு 15.12.2010 க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய
காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்
குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதலமைச்சர் அவர்களால், 26.1.2011 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர். |