அமீரக காயல் நல மன்றத்தால் வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்கு அமைப்புக் குழுவினர் வரவேற்கப்படுவதாக மன்றத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில், 26.11.2010 அன்று காயலர் ஒன்றுகூடல் மற்றும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. (விரிவான செய்திகள் விரைவில் காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் வெளியிடப்படும்.)
அக்கூட்டத்தில் மன்றத்தின் சார்பில் சிறப்பு மலர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மலர் எவ்வாறு அமையும் என்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டு, அதற்கான ஆக்கங்கள் உறுப்பினர்களிடமிருந்தும், உலக காயலர்களிடமிருந்தும் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே காயல்பட்டினம்.காம் வலைதளத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிறப்பு மலரை அனைவரும் ஆர்வப்படும் வகையில் நிறைவாக அமைத்திடும் பொருட்டு, அமீரகத்தில் பகுதி வாரியாக மலர் அமைப்புக் குழுவினர் வரவேற்கப்படுகின்றனர். மலருக்கான ஆக்கங்களைப் பரிசீலித்து, தகுதியானவற்றை தேர்வு செய்வது இக்குழுவின் முக்கியப் பணியாகும். தேவைப்படும் நேரங்களில் அழைக்கப்படும்போது, கலந்தாலோசனையில் கலந்துகொள்பவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில், மேற்படி மலர்க்குழுவில் அங்கம் வகிக்க விரும்புவோர் தமது தொடர்பு எண்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட தேவைப்படும் விபரங்களுடன் kayaluae.souvenir@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில், 30.11.2010 (நாளை) அமீரக நேரப்படி இரவு 07.30 மணிக்குள் தமது விருப்பத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத்தலைவர்,
காயல் நல மன்றம், ஐக்கிய அரபு அமீரகம். |